ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 10ஆம் நாளன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
காயல் நகர மக்களுக்காக பல்வேறு நலப் பணிகளை முன்னோடியாக இருந்து செய்து வரும் துபை காயல் நல மன்றத்தின் ஜூலை மாதத்திற்கான செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 10.07.2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ இல்லத்தில் வைத்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி டி. ஏ எஸ் மீரா சாஹிப் தலைமை தாங்க, செயற்குழு உறுப்பினர் அல்ஹாபிழ் கனி முஹம்மது இறைமறை வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் காயல் சொந்தங்களுக்காக மன்றம் செய்து வரும் பல்வேறு நலப் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன. சென்றவருடங்களைபோன்றே இவ்வருடமும் மன்ற உறுப்பினர்களிடமும், அமீரகவாழ் மன்ற ஆதரவாளர்களிடமும் மன்றத்தின் நலப்பணிகளுக்காக ஜகாத் நிதிவழங்க வேண்டப்பட்டது..
இவ்வாறு மன்றத்தின் மூலம் பெறப்படும் ஜகாத் நிதி நமதூர் ஏழை மக்களுக்கு வருடா வருடம் முறையாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் மருத்துவ சிகிச்சைக்காகவும், கல்விக்காகவும், சிறைவாசிகளின் குடும்பங்களுக்காகவும், சிறுதொழில், மற்றும் ஏனைய தேவையுடைய வறியவர்கள் உட்பட பல்வேறு நலத் திட்டங்களுக்கு நிதி உதவிகள் வழங்குவது என செயற்குழு தீர்மானித்தது.
இதற்காக மன்றத்தின் மருத்துவ உதவிக் கமிட்டியும், கல்வி உதவிக் கமிட்டியும் துரிதமாக செயல்பட்டு மன்றத்தின் உதவியை நாடி வந்திருக்கும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து தகுதியுள்ள நபர்களுக்கு உரிய நேரத்தில் நிதி உதவி சேருவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நமதூரில் இயங்கும், துபாய் காயல் பேரவையின் சிறப்புக்கூட்டம், இன்ஷா அல்லாஹ், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |