மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கத்தாவில் ஜூலை 18 சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அங்கு, காயலர்கள் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கோல்கத்தா ஜக்கரிய்யா தெருவிலுள்ள கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன் லுங்கி கம்பெனி வளாகத்தில், ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் ஹஸன் ரிழா இல்மீ நோன்புப் பெருநாள் தொழுகை நடத்த, ஹாஃபிழ் அப்துல் காதிர் குத்பா பேருரை நிகழ்த்த, துஆவுடன் தொழுகை நிறைவுற்றது.
இதில் காயல்பட்டினம், கீழக்கரை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் குடும்பமாகக் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஒன்றுகூடி கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். ஒன்றுகூடல் காட்சிகள் வருமாறு:-
கோல்கத்தாவில் வசிக்கும் லுங்கி - மாணிக்கக் கல் வணிகர்கள் அனுசரணையில், 1975ஆம் ஆண்டிலிருந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
K.Z.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
கோல்கத்தாவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |