கடந்த நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி 16.07.2015 வியாழக்கிழமையன்று, 19.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள தமுமுக நகர கிளை அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டது.
அரசி 1 கிலோ, மைதா அரை கிலோ, சீனி அரை கிலோ, எண்ணெய் அரை லிட்டர், நெய் 100 கிராம், ஜவ்வரிசி 100 கிராம், தேங்காய் 1 - ஆகிய சமையல் பொருட்கள் அடங்கிய பொதி, 175 ஏழைக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
நகர பிரமுகர்களும், தமுமுக அபிமானிகளுமான எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் (எல்.கே.எஸ்.), எஸ்.இப்னு ஸஊத், எல்.கே.கே.லெப்பைத்தம்பி, தமுமுக கிளை செயலாளர் ஆஸாத், துணைச் செயலாளர் ஜாஹிர் (ஏ.பீ.டீ.), மருத்துவ அணி செயலாளர் மவ்ஜூத், மமக நகர செயலாளர் ஐதுரூஸ், பொருளாளர் எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம், தமுமுக மாவட்ட பொருளாளர் ஷாஹுல் ஹமீத், மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், மாவட்ட துணைச் செயலாளர் ஹஸன் ஆகியோரும் ஃபித்ரா உணவுப் பொதிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தமுமுக - மமக மாவட்ட, நகர நிர்வாகிகளும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஜாஹிர் ஹுஸைன் (APT)
தமுமுக காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |