ஹாங்காங் நாட்டில் ஜூலை 18 சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்குள்ள கவ்லூன் மஸ்ஜிதில், 3 விடுத்தங்களாக பெருநாள் தொழுகை நடைபெற்றது.
காலை 07.30 மணிக்கு நடைபெற்ற பெருநாள் தொழுகையை, பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ (காயல்பட்டினம்),
காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பெருநாள் தொழுகையை, பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அர்ஷத் (பாகிஸ்தான்),
காலை 10.00 மணியளவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையை, ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் இப்றாஹீம் (காயல்பட்டினம்) ஸாஹிப்
ஆகியோர் வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினர். இவ்வனைத்து தொழுகைகளிலும், காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நிறைவில் அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். காட்சிகள் வருமாறு:-
பெருநாளை முன்னிட்டு, முந்தைய இரவில் - பள்ளி வளாகத்தில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ், மவ்லவீ ருக்னுத்தீன் மஹ்ழரீ வழிநடத்தலில் நடைபெற்றது.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
S.H.மக்பூல்
ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ
ஹாஃபிழ் B.S.அஹ்மத் ஸாலிஹ்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ஹாங்காங் கவ்லூன் பள்ளியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த செய்திகளைக் காண இங்கே சொடுக்குக! |