கேரள மாநிலத்தில் ஜூலை 18 சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அம்மாநிலத்தின் கோழிக்கோடு நகரில் – புதியர எனும் பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளியில், அன்று காலை 07.30 மணிக்கு பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடைபெற்றது. மவ்லவீ கே.வி.அப்துல் லத்தீஃப் தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார். இதில், சுமார் 50 காயலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தொழுகைக்குப் பின் ஒன்றுகூடிய காயலர்கள் தமக்குள் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
கோழிக்கோட்டிலிருந்து...
ஐதுரூஸ் (சீனா) |