சஊதி அரபிய்யாவில் ஜூலை 17 வெள்ளிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ரியாதில் வசிக்கும் காயலர்கள் பலர், அங்குள்ள மியூஸியம் பள்ளியில் அன்று அதிகாலை 05.30 மணியளவில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, குத்பா உரையிலும் கலந்துகொண்டனர்.


தொழுகைக்குப் பின் ஒன்றுகூடிய காயலர்கள் தமக்குள் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.







பின்னர், பெருநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டிருந்த சிறப்பு உணவுப் பதார்த்தங்களை - காலை, மதிய வேளைகளில் இணைந்தமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

தகவல்:
சட்னி S.M.முஹம்மத் அப்துல் காதிர்
செய்யித் அஹ்மத்
படங்கள்:
R.S.L.மீரா நெய்னா
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ரியாத் காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்திகளைக் காண இங்கே சொடுக்குக! |