காயல்பட்டினம் கடற்கரைக்கு வருவோர் தொழுவதற்காக, கடற்கரையையொட்டி - குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் தொழுமிடம் உள்ளது.
21.07.2015 செவ்வாய்க்கிழமையன்று, காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பாக அவ்விடத்தைச் சுத்தம் செய்து, தொழுகையை வழிநடத்தும் இமாம் நிற்குமிடத்திற்கு முன்பாக மறைப்பு அமைத்துள்ளதோடு, தொழ வருவோர் தமது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மறைவிடமும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் நிறுவனர் எஸ்.எம்.பி.செய்யித் அஹ்மத் அஸ்ஹர் வழிகாட்டலில், அதன் துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், உறுப்பினர்களான அஹ்மத் நியாஸ், யூஸுஃப், ஸிராஜுத்தீன், முஹம்மத் ஆஸிஃப், முஹம்மத் ஜப்ரூத், பக்கீர் ஆகியோர் இப்பணிகளை இணைந்து செய்தனர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
(துணைத்தலைவர் - காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்)
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |