காயல்பட்டினத்தில் ஜூலை 18 சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை, காலை 07.30 மணியளவில் நடத்தப்பட்டது. காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
நிகழ்வுகள் அனைத்திலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட - நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், தாஹா ஹாஜி, எஸ்.இ.மரைக்கார் ஆலிம், டாக்டர் அபுல்ஹஸன், எம்.ஏ.ஷேக் (பி.ஏ.ஷேக்) உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தொழுகை நிறைவுற்ற பின்னர், ஏழைகள் துயர்துடைக்கும் நலநிதிக்காக ரூபாய் 69 ஆயிரம் தொகையும், ஒரு தங்க மோதிரமும், 2 கிராம் தங்க நாணயமும் நன்கொடையாகப் பெறப்பட்டன. காயல்பட்டினம் துளிர் பள்ளி நலனுக்காக 7 ஆயிரம் ரூபாயும் இதன்போது சேகரமானது.
தகவல்:
‘எலக்ட்ரீஷியன்’ ஸலாஹுத்தீன்
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |