வழமை போல இவ்வாண்டும் 30 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கிட, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டம் 20.07.2015 திங்கட்கிழமையன்று 20.00 மணியளவில், பாளையம் எம்.ஏ.ஹபீப் முஹம்மத் தலைமையில், பைத்துல்மால் அலுவலக மாடியில் நடைபெற்றது.
கூட்டத் தலைவர் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். செயலாளர் வட்டம் ஹஸன் மரைக்கார், பொருளாளர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், துணைத்தலைவர்களான கத்தீபு எஸ்.ஏ.செய்யித் அஹ்மத், டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவர்த்தி, அறங்காவலர் எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபிஈ ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - 30 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை:
சென்ற வருடங்களைப் போல், இவ்வாண்டும் 30 மாணவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 2 - நிதியாதாரத்தைப் பெருக்கல்:
பைத்துல்மாலின் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்காக ஊர் தனவந்தர்களிடமும், உலகெங்கும் வாழும் நம்மூர் மக்களிடமும் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்ட ஏற்பாடுகளை, எம்.ஏ.சிந்தா மதார் முகைதீன், கே.எம்.சுல்தான் ஜரூக் ஆகியோர் செய்திருந்தனர்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் முந்தைய கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |