காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் தலைமையில் ஜூலை 27 திங்களன்று காலை
10:45 மணியளவில் - நகர்மன்ற வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 7வது வார்டு உறுப்பினர் அந்தோணி, 13வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.சம்சுதீன் தவிர்த்து அனைத்து உறுப்பினர்கள், நகராட்சி
மேலாளர் அறிவுச்செல்வன் உட்பட பல அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டம் சம்பந்தமாக விநியோகிக்கப்பட்ட ஆவணத்தில் - இது வேண்டுகோள் கூட்டம் என்றும், மாவட்ட
நகராட்சிகள் சட்டம் 1920 இன் தொகுப்பு 3, விதி 3(1) மற்றும் 3(2) கீழ், இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அக்கூட்டத்தில்
43 சாலைகள் குறித்து ஒரு மன்றப் பொருளாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தின் துவக்கமாக - மன்றப் பொருள் 1 ஆக, கீழ்க்காணும் வாசகங்களை நகர்மன்றத் துணைத் தலைவர் வாசித்தார்:
மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட
அறிவுரையின்படி ஒவ்வொரு வார்டுக்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள 7.7.2015 அன்று நகர்மன்றத் தலைவருக்கு
வேண்டுதல் கூட்டம் நடத்த கூறப்பட்ட கீழ்க்கண்ட பணிகளை நிறைவேற்ற நகர்மன்ற அனுமதி வேண்டப்படுகிறது.
கீழ்க்கண்ட பணிகள் என ஆவணத்தில் இருந்த 43 பணிகள் குறித்த விபரங்கள் எதுவும் வாசிக்கப்படவில்லை.
இவ்வாசகங்களை வாசித்தப்பின் - நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டு கொள்கிறேன் என நகர்மன்றத் துணைத் தலைவர்
கூற, கூட்டத்தில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தினர்.
16 பேர் ஆதரவு என தெரிவித்த துணைத் தலைவர், மன்றம் அனுமதி வழங்குகிறது என கூறியவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் பார்வையாளர்களாக சுமார் 15 பேர் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தின் வீடியோ பதிவினை காண கீழ்க்காணும் படத்தினை சொடுக்கவும்:
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம். |