Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:13:33 AM
செவ்வாய் | 12 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1930, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:0715:2818:0019:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:56
மறைவு17:54மறைவு02:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:47
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16326
#KOTW16326
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 28, 2015
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4654 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 14)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 83.

ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மாலை 6.30 மணியளவில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேகாலயா ஆளுநர் வி.சண்முக நாதன், தலைமைச் செயலர் வாஜிரி, ஆகியோர் கலாம் அனுமதிக்கப்பட்ட பெதானி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம்.

ராமேஸ்வரத்தில் அக்டோபர் 15, 1931-ம் ஆண்டு பிறந்தார் அப்துல் கலாம்.

1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அழைக்கப்படுபவர் அப்துல் கலாம்.

பத்ம பூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார் அப்துல் கலாம். தமிழகத்திலிருந்து 3-வது குடியரசுத் தலைவராவார் அப்துல் கலாம். ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்தபடியாக அப்துல் கலாம் தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்துல் கலாம் மறைவையடுத்து இன்று (செவ்வாய்) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள் இரவு திடீரென காலமானார். அவருக்கு வயது 83.

அவரது மறைவையொட்டி 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் காலை அவரது உடல் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.







அப்துல் கலாம் வாழ்க்கைக் குறிப்பு:

அப்துல் கலாம் 1931, அக்டோபர் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜைனுலாபுதீன், ஒரு படகுக்குச் சொந்தக்காரர். அப்துல் கலாமின் தாயார் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதிலேயே குடும்ப வருவாய்க்காக வேலைக்குச் சென்றார்.

பள்ளிப் படிப்பை முடித்த அவர் செய்தித்தாள்களை கொண்டு போடும் வேலையில் இருந்தார். படிக்கும் காலங்களில் கணிதம் அவருடைய விருப்பமான பாடமாக இருந்தது.

ராமநாதபுரம் ஷ்வார்ட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் மேல்படிப்புக்காகச் சேர்ந்தார். இங்கு பவுதிக பட்டப்படிப்பை 1954-ம் ஆண்டு நிறைவு செய்தார்.

அதன் பிறகு 1955-ம் ஆண்டு சென்னை வந்த அப்துல் கலாம், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பில் நுழைந்தார். இந்திய விமானப்படையின் போர் விமானி ஆகவேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேறவில்லை, காரணம், 8 இடங்களே கொண்ட பணியின் தகுதிச்சுற்றில் அவர் 9-வது நபராக முடிந்தார்.

பிறகு 1960-ம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் வென்ற அப்துல் கலாம், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாக இணைந்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.

இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா

உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

அவரது நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2012, எழுச்சி தீபங்கள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.

தகவல்:
தி இந்து

புகைப்படங்கள்::
Rediff.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கனவுக்கு புதிய பரிணாமம் தந்த 84 வயது இளைஞர் அப்துல் கலாம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 July 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41425

கனவு தூக்கத்தில் வருவது இரவில் காணும் கனவு பகலில் காணும் கனவு. நாம் நம் தகுதிக்கு மேல் பெற வேண்டும் என்று ஆசைப்படுவது எல்லாமே கனவு என்றுதான் பேசப்படுகிறது.

”கனவு என்பது உங்கள் தூக்கத்தில் வருவதல்ல அது உங்களை தூங்க விடாமல் செய்வது” என்று கனவுக்கு புதிய பரிணாமம் தந்தவர் அப்துல் கலாம் அவர்கள்.

இளைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் ஒரு புதிய தெம்பை தந்த ஒரு முதிய தலைமுறைக்கு சொந்தக்காரர் அப்துல் கலாம். நம்மிடையே 84 வயது நிறைந்தவர்களை கேட்டு பாருங்கள் காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது, இந்த நிலையில் எங்கே போவது எங்கே உழைப்பது. சாப்பாட்டுக்கு ஏதாவது இருந்தால் போதும் காலத்தை இப்படியே ஓட்டி கொண்டு போய் சேர வேண்டியது தான் என்பார்கள். ”மரணத்தை பற்றி நான் எப்போதும் அஞ்சியதே இல்லை எல்லோரும் ஒரு நாள் போய் சேர வேண்டியவர்கள்தான்” என்று சொன்னவர் அப்துல் கலாம்.

84 வயதில் ஒரு குளிர் பிரதேசத்தில் சென்று உரையாற்றும் தெம்பு இந்த வயதில் யாருக்கும் இலகுவில் வரக்கூடியது அல்ல. அதுவும் அரசு கார்கள் காவலர்களுடன் தக்க பாதுகாப்புகளுடன் சென்று வரும் ஒரு ஜனாதிபதியோ பிரதமரோ ஒரு கட்சியின் தலைவரோ அல்ல. சாதாரண ஒரு மனிதராக சென்றிருக்கிறார். அவரது வயதை ஒத்தவர்களுக்கு மத்தியில் அவர் உரையாடவில்லை. 18 – 30 வயதுற்குப்பட்ட மாணவ மாணவிகள் மத்தியில் எழுச்சி உரை ஆற்றி இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் அவர்கள் கேள்விகள் கேட்பார்கள். எந்த விதமான முன் குறிப்பும் இல்லாமல் பதில் சொல்லக் கூடிய ஆற்றல் – நகை சுவையுடன் அவர்களுடன் உரையாடும் அற்புதமான அக்னி சிறகு கொண்டு பறப்பவர் இந்த 84 வயது இளைஞர். அவர் வாழும் காலத்திலேயே அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து இந்திய அரசு அவரை கௌரவித்தது உலகில் 9 வது அதிசயம்.

அவர் மறைந்து விட்டாலும் அவருடைய துணிவு, தளாரத உணர்வு, தனக்கு வயதாகி விட்டது என்ற சோர்வு இல்லாமை எல்லாம் நமக் கொரு முன்மாதிரி.

அவர் தமிழ் மண்ணில் பிறந்தவர் இஸ்லாமிய சமுதாயத்தில் பிறந்தவர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை.

”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்ற கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை.

மர்ஹூம் அவர்களின் பாவங்களை அல்லாஹ் பொறுத்தருள்வானாக அவரது நற் செயல்களை பொருந்திக் கொள்வானாக அவருக்கு சொர்க்க வாழ்வை நசீபாக்கி கொடுப்பானாக என்று அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

உங்களின் மறைந்தவர்களின் நன்மைகளை மட்டுமே பேசுங்கள் என்ற நபி மொழிக்கொப்ப அவரது குறைகளை இங்கு குறிப்பிட்டு கருத்துப் பதிவுகள் செய்வதை தவிர்ப்போமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M. S. Shah Jahan (Sri Lanka) [28 July 2015]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41426

இறந்தும் இறவா இம் மாமனிதருக்காக காவாலங்கா தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது - இறைவனிடம் இறைஞ்சுகிறது.

எம். எஸ். ஷாஜஹான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nizam (india) [28 July 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41428

இன்னலிள்ளஹி இன்னா இளைஹு ராஜிஊன்.

இறைவன் அவருடைய மண்ணறையை சொர்கபுஞ்சொலைஆக்குவான

காவிய நாயகன் இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்தவர் காவல் துறையினரை மக்களோடு மனிதநேயத்தோடு அணுகவேண்டும் என்பதை அறிவுறுத்தினார் அநாதை குழந்தை விசயத்தில் பரிவு காட்டினார்

ஒரு வருத்தம் இரண்டாவது முறை அவரை ஜனாதிபதியாக்க புரட்சி தலைவி அம்மா அவர்கள் முயற்ச்சி செய்தபோது சில அரசியல் சக்திகள் தடுத்துவிட்டன இன்று ஓகோ என்று ஒப்பரின்வைக்கும் மீடியாக்கள் சில வருடங்களாக சினிமாவுக்கு பலமணிநேரம் ஒதுக்கியது ஆனா இவரது நிகழ்சிகளை கருத்துகளை பரப்ப சிலநிமுடங்கள் கூட ஒதுக்கவில்லை

நமது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும் பக்கத்த்கு மாவட்டத்துகாரர் என்பதால் அவருக்கு நமதூர் சார்பில் மௌன அஞ்சலி அனுதாப கூட்டம் நடத்தினால் ஒரு மனஆறுதல் erpadum


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக!
posted by M.S.ABDULAZEEZ (Gz) [28 July 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 41429

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [28 July 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41430

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [28 July 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41431

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் நல்லறங்களை ஏற்று மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுபிட்ஷமாக்குவானாக!

இவர்களின் வெற்றிடத்தை இவர்களைப்போல் திறமயானவரை நம் சமுதாயத்திலிருந்தே இறைவன் தந்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by CADER (JAIPUR) [28 July 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 41432

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 July 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41434

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னலிள்ளஹி இன்னா இளைஹு ராஜிஊன்.<<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [28 July 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 41437

ஜனாதிபதி பதவியே ஒரு பொம்மை பதவி என்ற அவபெயரை மாற்றி நவீன மாணவர் கல்விபுரட்சிக்கு வித்திட்டவர் அப்துல் கலாம் அவர்கள். அன்னாரின் இழப்பு நமது இந்தியாவிற்கு பேரிழப்பு.

நாட்டின் சேவை ஒன்றே குறிகோளாக தமது இறுதி மூச்சி வரைக்கும் உழைத்தவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவர்க்கம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohideen (dubai) [28 July 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41442

இத்தேசம்,
உத்தேசமாய்
இரண்டு கலாம்களை
கண்டது...

முன்னவர் அபுல் கலாம்
பின்னவர் அப்துல்கலாம்
இருவருமே கலமுக்கு
பெருமை சேர்த்தவர்கள்

பிறப்பால் எளிய குடிசையில்
பிறந்து - கல்வியால், உயர்
குணத்தால் மிளிர்ந்தாய்

எம் இந்தியா
வல்லரசாக மட்டுமின்றி
நல்லரசாகவும் திகழ
உழைத்தாய்

ஓய்வுக்கு ஓய்வை தந்தாய்

உறங்கிக் கொண்டிருந்த
இளைஞர்களை விழிக்கச்செய்து
கனவு காணச் சொன்னாய் .

எல்லோரையும்
இந்தியராய் பார்த்தாய்
விந்தை மனிதரானாய் - நல்ல
சிந்தை மனிதராயும் ஆனாய்

நோயுற்ற எம் நாடு
நீயும், மன்மோஹனும் டாக்டராய்
ஆட்சியில் இருந்தபோதுதான்
ஆரோக்கியமாய் இருந்தது

உலகிலேயே அதிகாரத்தில்
இரு கூரிய முனை(வர் )கள்
எம் திருநாட்டில் மட்டுமே...

அக்கினிச் சிறகுகளை
எமக்கு தந்துவிட்டு
பறந்து போனாயோ - எம்மை
பிரிந்து போனாயோ

இறைவா ...
இருலோக அதிபதியே
இவர்தம் பிழை பொறுப்பாய்
உயர் நல் இடம் அளிப்பாய் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [28 July 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 41444

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Rizwan (Jeddah) [28 July 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41447

இன்னாலில்லாஹி வஇன்ன இனலஹி ராஐுவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:... Assalaamu Alaikkum va Rahmathullahi va Barakkathuhu.
posted by AHAMED SHAHUL HAMEED (Padapai) [28 July 2015]
IP: 107.*.*.* | Comment Reference Number: 41451

Assalaamu Alaikkum va Rahmathullahi va Barakkathuhu. إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس وحشته ونور ضريحه وتقبل من حسناته وجاوز عن سيأته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم اللهم اجعل قبره روضة من رياض الجنان.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா) [29 July 2015]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41454

ஏழையாய் பிறந்தால் என்ன?
ஏவுகணை விட்டு சாதிக்'கலாம்'...

அரசு பள்ளியில் படித்தால் என்ன?
அணுக்களையும் பிளக்'கலாம்'...

சிறுபான்மையினராய் இருந்தால் என்ன?
அக்னி சிறகை விரிக்'கலாம்'...

சிற்றூரில் பிறந்தால் என்ன?
சீன,அமெரிக்காவையும்
நடுங்க வைக்'கலாம்'...

தமிழ்வழி கல்வி படித்தால் என்ன?
தரணி போற்ற ஜெயிக்'கலாம்'...

இளைஞர்களின் நம்பிக்கை 'க(ளா)லாம்'...
எளியவர்களின் நம்பிக்கை 'க(ளா)லாம்'...

அவர் மறைந்திறுக்'கலாம்' - மக்கள் மனதில் மாறாமல் என்றும் நிறைந்திறுக்'கலாம்'... நன்றி -முகநூல் நண்பர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோரின் மனம் எல்லாம் நிறைந்து வாழ்ந்து மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து மேலான சுவனபதியை அளித்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. condolence
posted by kayal R.S.Elavarasu (chennai) [30 July 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41460

இளைய இந்தியாவின் கனவுத்தந்தை !

நீரில் மிதக்குது ராமேஸ்வரம்
கண் ணீரில் மிதக்குது.

உலகையெல்லாம் அன்பாலே
வெற்றிகண்ட தலைமகன்
உறங்குதற்கு உவப்போடு
வந்துவிட்டான் தாய்மண் !

இரண்டு நூற்றாண்டுகளில்
ஒன்றுகூடி
இந்தியாவே அழுதது
உன் இறப்பு செய்தி கேட்டு
மட்டும்தான்.

உன் முயற்சியால்
பொக்கிரான்
எதிரியை பயமுறுத்தியது.
உன் பயிற்சியால்
குறைந்த எடை செயற்கை காலோடு
என் சகோதரன்
நிற்கிறான்
என்ற மகிழ்ச்சிக்கு இணையேது?

நீ இரண்டாம் தேசத்தந்தை அல்ல.
இளைய இந்தியாவின்
கனவுத்தந்தை.

இனி
அமெரிக்கவின் அப்துல் கலாம்!
ஐரோப்பாவின் அப்துல் கலாம்!
ஆப்ரிக்காவின் அப்துல் கலாம்!
உருவாகக்கூடும்.
அதற்கு
உன் முயற்சியும் பயிற்சியுமே
கருவாக வாழும்.

மக்களோடு கலந்து வாழ்ந்தவன் நீ!
உன்னை ஏனோ
இரண்டு ஏக்கர் நிலத்தில்
தனிமைப்படுத்தி
விதைத்திருக்கிறார்கள்!
உன் வீரியம்
கடல் பூமி பரவி நிற்கும்.
அது உன்
கனவுகளுக்கு விடை கொடுக்கும்.

அப்துல் கலாம்-
உங்களுக்கு
அகிலத்தின் சலாம் !
--- காயல் ஆர்.எஸ்.இளவரசு
தலைவர்
தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம்
98400 42255


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved