ஜூலை 26 ஞாயிறு அன்று மாலை சுமார் ஐந்து மணியளவில், காயல்பட்டினம் கடற்கரையில் - விசைப்படகு மூலம் பொதுமக்களை ஒரு சிலர் - கடலுக்கு - சுமார் ஒரு கீ.மீ தூரம் வரை - உல்லாச சவாரி அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். இதற்குரிய பணத்தையும் வசூலித்துக் கொண்டிருந்தனர்.
விசைப்படகில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பயணம் செய்தனர். பலமுறை ஆட்களை சவாரிக்கு அழைத்துச் சென்று திரும்பிய அப்படகு, மீன் பிடித்தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது.
படகில் உயிர்காக்கும் உபகரணங்களோ அல்லது முதலுதவிப் பொருட்களோ ஆபத்தை தவிர்க்கும் வசதிகளோ இன்றி முற்றிலும் பாதுகாப்பிற்கு எந்த முகாந்தரமும் இன்றி காணப்பட்டது.
இதற்கான முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு - படகை இயக்கியவர்கள் சரியான பதில் கூறவில்லை. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது குறித்தும் அவர்களிடம் அங்கிருந்த ஒரு சிலர் சுட்டிக்காட்டினர்.
ஆரம்பத்தில் - ஆட்சேபனைகளை கண்டுக்கொள்ளாமல் தங்கள் படகுகளை இயக்கி வந்த அவர்கள், அழுத்தமாக ஒரு சிலரால் வலியுறுத்தப்படவே, தங்கள் படகு சேவையை நிறுத்தினர்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
|