தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்ற முஸ்லிம் மகளிர் உதவும் சங்க நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு இணை மானியம் வழங்கும் விழா, 25.07.2015 சனிக்கிழமையன்று 10.30 மணியளவில், காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிக்குமார் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 371 பயனாளிகளுக்கு 26 இலட்சம் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவரது உரையில் தெரிவித்தாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா சிறுபான்மையினருக்கு எத்தனையோ நலத்திட்ட உதவிகள் செய்துள்ளர். ஏழை, எளிய மக்களுக்கான இந்த ஆட்சி சிறப்பாக நடக்கின்றது. அவர், சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குபவர்.
ஹஜ் பயணம் செல்லும் நமது முஸ்லிம் நண்பர்களுக்கான மானியத்தினை முதன்முதலில் வழங்கியவர். முதலில் தந்த மானியத்தை விட கூடுதலாக பெற்றுத்தந்த பெருமையும் அவரையே சாரும்.
ரம்ஜான் நோன்பு இருக்கும் நண்பர்களுக்காக நோன்பு கஞ்சி காய்ச்ச இலவச அரசி வழங்கி மேலும் பெருமை சேர்த்தார். உலமா ஒய்வூதிய திட்டம் தந்தார்.
காயல்பட்டினம் நகராட்சி மக்களின் சாலை வசதி வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை கூடிய விரையில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ் செல்வராஜன், மக்கள் தொடர்பு உதவி அலுவலர் தே.ராம்குமார், திருச்செந்தூர் வட்டா்டசியர் வெங்கடாச்சலம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் ம.காந்திராஜன், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா, ஏ.ஹைரிய்யா, ஏ.பாக்கியஷீலா, எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்ட தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மு.ராமச்சந்திரன், அதன் காயல்பட்டினம் நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், ஒன்றிய செயலாளர்களான அமலி டி.ராஜன், அம்மன் டி.நாராயணன், அதிமுக நகர நிர்வாகிகளான என்.எம்.அகமது, பூந்தோட்டம் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் கௌரவ செயலாளர் வஹிதா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜே.விஜயா நன்றி கூறினார்.
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |