இந்திய நாட்டின் தலைசிறந்த விஞ்ஞாணியும், முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய மாணவர்களின் தலைசிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம், 27.07.2015 திங்கட்கிழமையன்று 19.30 மணியளவில் காலமானார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் “நகர்நலம் நாடும் அனைத்து சமுதாய மக்கள்” சார்பில், இன்று 16.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் நகர மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு, அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.கோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 3:30 pm / 30.7.2015]
|