இந்திய நாட்டின் தலைசிறந்த விஞ்ஞாணியும், முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய மாணவர்களின் தலைசிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம், 27.07.2015 திங்கட்கிழமையன்று 19.30 மணியளவில் காலமானார். அவரது உடல், 30.07.2015 வியாழக்கிழமையன்று - அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் - இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நல்லடக்க நிகழ்ச்சியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ரோசய்யா, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வரின் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், கேரளம் - புதுச்சேரி மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களான வை.கோபால்சாமி, விஜயகாந்த், இ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு பின்வருமாறு தட்டிப் பலகை நிறுவப்பட்டுள்ளது:-
பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள தட்டிப் பலகை:-
நகர்நலம் நாடும் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் நிறுவப்பட்டுள்ள தட்டிப் பலகை:-
இளைஞர் ஐக்கிய முன்னணியின் சார்பில், அதன் நூலக கரும்பலகையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
ஹாஜி S.M.உஸைர்
A.S.புகாரீ
R.S.கோபால்
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பாரதீய ஜனதா கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர்நலம் நாடும் அனைத்து சமுதாய மக்கள் கூட்டமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|