துபை காயல் நல மன்றத்தின் உள்ளூர் அமைப்பான காயல் துபை நல மன்றம் (KADWA) சார்பில், 06.08.2015 வியாழக்கிழமையன்று இன்பச் சிற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள அதன் அங்கத்தினருக்கு அழைப்பு விடுத்து, அமைப்பின் செயலாளர் எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS) வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றம் சார்பில், உள்ளூர் காயல்பட்டினத்தில் - மன்றத்தின் நகர்நலச் சேவைகளைச் செயல்படுத்திடுவதற்காக - துபையிலிருந்து விடைபெற்று நிரந்தரமாக காயல்பட்டினத்தில் வசிக்கும் ஆண்களை உறுப்பினர்களாகக் கொண்டு, “Kayal Dubai Welfare Association - KADWA” (காயல் துபை நல மன்றம்) எனும் பெயரில் தனியமைப்பு 25.05.2015 திங்கட்கிழமையன்று துவக்கப்பட்டது.
இவ்வமைப்பின் சார்பில், அதன் உறுப்பினர்கள் மற்றும் விடுமுறையில் காயல்பட்டினம் வந்திருக்கும் துபை காயல் நல மன்ற உறுப்பினர்களுக்காக, 06.08.2015 வியாழக்கிழமையன்று இன்பச் சிற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 09.30 மணியளவில், காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளி அருகிலிருந்து வாகனத்தில் புறப்படவுள்ளது.
திருச்செந்தூரிலுள்ள ஒரு தோட்டத்தில் நடைபெறவுள்ள இந்த இன்பச் சிற்றுலாவில், அமைப்பின் கடந்த கால செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து, முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு, தேனீர் - சிற்றுண்டி பரிமாறப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மேற்படி அங்கத்தினர் அனைவருக்கும் அவரவர் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளப்பட்டுள்ளது என்றாலும், இதுவரை தகவல் கிடைக்கப் பெறாத - அமைப்பின் அங்கத்தினர், விடுமுறையில் ஊர் வந்திருக்கும் துபை காயல் நல மன்ற உறுப்பினர்களுக்காக இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதையே அழைப்பாக ஏற்று நிகழ்வில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் வருகையை உறுதி செய்யவும், கூடுதல் விபரங்களுக்கும் +91 99659 74253 என்ற எனது கைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்க!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KADWA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 23:07 / 03.08.2015] |