இந்திய நாட்டின் தலைசிறந்த விஞ்ஞாணியும், முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய மாணவர்களின் தலைசிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம், 27.07.2015 திங்கட்கிழமையன்று 19.30 மணியளவில் காலமானார். அவரது உடல், 30.07.2015 வியாழக்கிழமையன்று - அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் - இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், காயல்பட்டினம் கடற்கரையில் - நகர்நலம் நாடும் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் 30.07.2015 வியாழக்கிழமையன்று 17.30 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
மாணவர் ஹிஷாம் கிராஅத் ஓதி துவக்கி வைத்த இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆசிரியர் ஏ.எல்.பஷீருல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், ஜெயலலிதா பேரவை காயல்பட்டினம் நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், இளந்தளிர் முத்து, காளிமுத்து, ராவன்னா அபுல்ஹஸன், பால் ரோஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் - மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் உரையாற்றினர்.
ஜெ.ஏ.லரீஃப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.கோபால் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[தேதி திருத்தப்பட்டது @ 19:36 / 04.08.2015]
|