காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகிக்கும் நிகழ்ச்சி, 27.07.2015 அன்று 15.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, ஏ.டீ.முத்து ஹாஜரா, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தியதோடு, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தனக்கு வழங்கப்பட்ட சால்வையை, தனது முன்னாள் ஆசிரியரும் - பள்ளியின் தலைமையாசிரியருமான மு.ஜெஸீமாவுக்கே மீண்டும் அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இவ்விழாவில், பள்ளியின் 107 மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வழங்கி, வாழ்த்திப் பேசினார்.
பள்ளியின் கணித ஆசிரியை பீர் ஃபாத்திமா பீவி நன்றி கூறினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நகர்மன்றத் தலைவருக்கு, பள்ளி மாணவியர் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்)
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், கடந்தாண்டு (2014) தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |