0 + 0 + 0 + 0 + 0 = 2.2, 3, 4, 4.5, 4.75, 5.5, 6.1, 6.2, 6.3 லட்சம்?! |
சுமார் 57 லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான டெண்டர் நேற்று காயல்பட்டினம் நகராட்சியில் திறக்கப்பட்டது. யாருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இப்பணிகள் அனைத்திற்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம், நகர்மன்றத்தால் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. ஒப்புதல் வழங்கப்பட்ட 41 இடங்களில், 9 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கவும் (மொத்த மதிப்பீடு - 29.50 லட்சம் ரூபாய்), அனுமதி வழங்கப்பட்ட 22 சாலைகளில், 8 சாலைகளை அமைக்கவும் (மொத்த மதிப்பீடு - 38.05 லட்சம் ரூபாய்) - தற்போது ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ள 17 பணிகள் குறித்து, நகராட்சி மூலம் - தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள
ஆவணங்களை - காயல்பட்டணம்.காம் பதிவிறக்கம் செய்து, பார்வையிட்டது.
பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
(1) சாலைப் பணிகள்
(i) சிறு பள்ளிக்கு எதிர்புறம் தெருவில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல்
(ii) செய்யது காலனி தெருவில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல்
(iii) காயிதே மில்லத் நகர் தெற்கு பகுதி சாலை சுலைமான் ஒலி பள்ளி அருகில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல்
(iv) ஓடக்கரை தெற்கு தெருவில் (ஊ.ஒ.பள்ளிக்கு எதிர்புறம்) சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல்
(v) மேல நெசவு தெரு சாலையில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல்
(vi) புதுப்பள்ளி சாலையில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல்
(vii) மெய்தீன் பள்ளி சாலையில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல்
(viii) புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சாலையில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல்
(2) உயர் கோபுர மின் விளக்குகள்
(i) கோமான் பள்ளி அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல்
(ii) மொஹுதூம் தெரு - மொஹிதீன் தெரு சந்திப்பு அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED)
அமைத்தல்
(iii) சிறு பள்ளி அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல்
(iv) YUF சங்கம் அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல்
(v) பரிமார் தெரு சந்திப்பில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல்
(vi) பெரிய நெசவு தெரு தெற்கு பகுதி ஜாபர் சாதிக் தர்கா (IOB வங்கி அருகில்) உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல் (400
வாட்ஸ்)
(vii) ஓடக்கரை மெயின் பகுதியில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல்
(viii) ரெட் ஸ்டார் சங்கம் அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல்
(ix) காட்டு தைக்கா தெரு அருசியா பள்ளி அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல்
இதில் பல்வேறு முரண்பாடுகளும், குறைப்பாடுகளும் உள்ளன.
(1)
ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் பல பணிகள், பல சிறு பணிகளை உள்ளடக்கியவை ஆகும். உதாரணமாக சாலைப் பணி என்பது ஒரு பணி என்றாலும், அது (சாலையை தோண்டுவது, சிறு கற்கள் தூவுவது, தார் ஊற்றுவது போன்று) பல சிறு பணிகளை உள்ளடக்கியது.
ஒப்பந்தப்புள்ளி ஆவணம் (TENDER DOCUMENT) - அந்த ஒவ்வொரு சிறு பணியையும் விவரித்து, அதற்கான மதிப்பீட்டு தொகையையும் தனித்தனியாக வழங்கி, அவை அனைத்தையும் கூட்டினால் வரும் தொகையே - அப்பணிக்கான மொத்த மதிப்பீட்டு தொகை என
தெரிவிக்கும்.
தற்போது காயல்பட்டினம் நகராட்சியால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில், மொத்த தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறு பணிகளுக்கான தொகை தனியாக வழங்கப்படவில்லை.
சாலைப் பணிகளுக்கான ஆவணத்தில், சிறு பணிகள் தனியாக காண்பிக்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்கான தொகை தனியாகக் காண்பிக்கப்படவில்லை.
உயர் கோபுர மின் விளக்குகள் பணிகளுக்கான ஆவணத்தில், சிறு பணிகள் கூட தனியாக காண்பிக்கப்படவில்லை.
அவ்வாறு தனியாக மதிப்பீடு தயாரிக்காமல், எவ்வாறு மொத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
அவ்வாறு தயாரிக்கப்பட்டிருந்தால், அவை ஏன் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
(2)
ஒப்பந்தப்புள்ளிகள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகை - கடந்த ஆண்டு (2014-15) ஒப்புதல் கொடுக்கப்பட்ட மதிப்பீட்டு தொகையாகும். மதிப்பீட்டு தொகைகள் - அரசு துறைகள் வெளியிடும் SCHEDULE OF RATES ஆவணம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட, மதிப்பீட்டு தொகை அடிப்படையில் - புது நிதியாண்டு துவங்கி 4 மாதங்கள் கழித்து - பழைய மதிப்பீட்டு தொகை அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
எனவே - மொத்த மதிப்பீட்டு தொகை சரியானது மற்றும் சாத்தியமானது என்பதனை அறிந்திட - ஒவ்வொரு சிறு பணிகளுக்கான மதிப்பீட்டு தொகை
அவசியமாகும்.
ஒப்பந்ததாரரால் - தான் வழங்கும் லஞ்சம், தனது லாபம் ஆகியவற்றுக்கு பணத்தை ஒதுக்கி - கடந்த நிதியாண்டு மதிப்பீட்டு தொகை அடிப்படையில், தரமான பணியினை செய்யமுடியுமா என்பது கேள்விக்குறியே.
(3)
உயர் கோபுர மின் விளக்கு பணிக்கு கடந்த ஆண்டு நகர்மன்றம் ஒப்புதல் வழங்கும்போது தெரிவித்த மதிப்பீட்டு தொகைக்கே தற்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
4 * 60 வாட் LED பல்புகளை தாங்கும், 10 மீட்டர் உயர் கோபுரங்களை, 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 41 இடங்களில் அமைக்க - கடந்தாண்டு
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி ஆவணம், 90 வாட் LED பல்புகள், 5 எண்ணங்களில் பொறுத்த - அதே மதிப்பீட்டு தொகையை
குறிப்பிடுகிறது.
இந்த முரண்பாடான தகவல் (நகர்மன்றம் தீர்மானம் / ஒப்பந்தப்புள்ளி ஆவணம்), முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. |