| |
செய்தி எண் (ID #) 16377 | | | வெள்ளி, ஆகஸ்ட் 7, 2015 | புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2575 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பின்வருமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகள் கோரிய விண்ணப்பங்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு அதனை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் கூராய்வு செய்து, தகுதியான ஒவ்வொரு விண்ணப்பதாரர்களுக்கும் கணிணி எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பொருள் விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள மாவட்ட விநியோக அலுவலர் அலுவலகத்தில் மேலாய்வு செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் முதுநிலை அடிப்படையில் வெளிப்படைத்தன்மையாக (transperancy) இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில், மாவட்ட நிர்வாகத்தால் தூத்துக்குடி மாவட்ட இணையதளமான www.thoothukudi.nic.in என்ற முகவரியில் பொதுமக்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதார்கள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒதுக்கப்பட்ட கணிணி எண் முதுநிலைப் பட்டியலில் உள்ளதை உறுதிபடுத்திக்கொள்ளலாம். வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒரு முறை ஒதுக்கீடு செய்யப்பட்ட கணிணி எண், அந்த விண்ணப்பதாரருக்கு குடும்ப அட்டை அச்சடித்து வழங்கும் வரை அடையாளமாக இருக்கும் என்பதுடன் புதிய குடும்ப அட்டையில் அதே கணிணி எண் அச்சடிக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளது தேதியில் 4072 விண்ணப்பதாரர்கள் புதிய குடும்ப அட்டை கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்கள் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டு, குடும்ப அட்டை அச்சடிப்பதற்காக தயார் நிலையில் உள்ளது. மேற்படி இணையதளத்தில் குடும்ப அட்டை அச்சிடப்பட்ட பின், அச்சிடப்பட்ட குடும்ப அட்டைதாரருக்குரிய கணிணி எண், இணையதளத்தில் தனியாக வட்டம் வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுடைய விண்ணப்பம் நிலை குறித்து அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக இலவசமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் குறித்து, http://www.thoothukudi.nic.in/files/Process_List.pdf என்ற இணைப்பில் சொடுக்கி, தகவலை நேரடியாக அறியலாம்!
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|