தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் சார்பில், நடப்பாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணியருக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பயணியருக்கான தடுப்புபூசி முகாம், 29.07.2015 புதன்கிழமையன்று, காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் உமா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஹமீத் ஹில்மீ, மருத்துவர் அகல்யா ஆகியோர், ஹஜ் பயணியருக்கு உடற்பரிசோதனைகளை மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தினர்.
இம்முகாமில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த பயணியர் உட்பட - தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 80 பயணியர் பங்கேற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை, வட்டார சுகாதார ஆய்வாளர்களான சோமசுந்தரம், ஜெய்சங்கர், சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கிராம சுகாதார செவிலியர், கே.எம்.டீ. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற ஹஜ் பயணியருக்கான தடுப்பூசி முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹஜ் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |