Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:41:27 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16388
#KOTW16388
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 8, 2015
காயல்பட்டினம் நகராட்சிக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தொகை 3 மடங்கு உயர்கிறது! ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என எதிர்பார்ப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2294 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மத்திய அரசின் - மத்திய நிதி ஆணையம் (Central Finance Commission) 1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஐந்தாண்டு பணிகாலங்களுக்காக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் முக்கிய பணி - மத்திய அரசு விதிக்கும் வரிகளை, மத்திய - மாநில அரசுகள் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து பரிந்துரை செய்வது. மேலும் இந்த ஆணையம், மாநில அரசாங்கங்கள் - தத்தம் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கு, மத்திய அரசின் மானியத்தை எவ்வாறு பகிர்ந்து வழங்குவது என்பது குறித்தும் பரிந்துரை செய்யும்.

ஜனவரி 2013 இல் மத்திய அரசின் 14வது நிதி ஆணைய குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரை இவ்வாண்டு பிப்ரவரி மாதம், மத்திய அரசால், ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பரிந்துரை - ஏப்ரல் 1, 2015 முதல் மார்ச் 31, 2020 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்திற்கு பொருந்தும்.

14வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி - இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில், மத்திய அரசு - தான் வசூல் செய்யும் வரியில் 42 சதவீதத்தை மாநிலங்களுடன் பகிர்ந்துக்கொள்ளும். 13வது நிதி ஆணைய காலகட்டத்தில், இது 32 சதவீதமாக இருந்தது.

மத்திய அரசால் வழங்கப்படும் பொது அடிப்படை மானியம் (General Basic Grant) 2015-16 ஆம் ஆண்டு முதல் - ஒவ்வொரு ஆண்டும், இரு தவணையாக மாநில அரசால் - உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும்.

அதன்படி முதலாம் ஆண்டின் (2015 - 16) முதல் தவணை உள்ளாட்சி மன்றங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, 56 லட்சத்து, 3 ஆயிரத்து, 533 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக அமுலில் இருந்த 13வது மத்திய நிதி குழு பரிந்துரை காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சிக்கு சராசரியாக ஆண்டொன்றுக்கு 35 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது அது - ஆண்டொன்றுக்கு, 1.10 கோடி ரூபாய் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த தொகை - State Bank of India வங்கியின் தூத்துக்குடி கிளையில் உள்ள காயல்பட்டினம் நகராட்சிக்கான - 10852664253 எண் வங்கி கணக்குக்கு Electronic Clearance System (ECS) முறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ECS மூலம் பணம் அனுப்பப்பட வேண்டும் என்பது - மத்திய அரசின் பொது செயல்பாடு மானியம் (General Performance Grant) பெற, மத்திய அரசு - மாநில அரசுக்கு - விதித்துள்ள 9 நிபந்தனைகளில் ஒன்று. பார்க்கவும் கீழே.

காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள முதல் தவணை தொகை விபரம்

















இந்த மானிய தொகையை உள்ளாட்சி மன்றங்கள் எந்த வகைக்கு செலவு செய்ய வேண்டும் என தமிழக அரசு - 24-7-2015 தேதியிட்ட அரசாணை (G.O. [Ms] No. 108 dt 24.7.2015) மூலம் தெரிவித்துள்ளது. அந்த அரசாணைப்படி - இந்த மத்திய அரசின் மானிய தொகை,

**** உள்ளாட்சி மன்றங்களின் குடிநீர் திட்டங்கள் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களில் உள்ளாட்சி மன்றங்களின் பங்களிப்பு தொகையினை வழங்கவும்,

**** மின்சார கட்டணங்களை கட்டவும்,

**** TWAD / CMWSSB அமைப்புகளுக்கான குடிநீர் கட்டணங்களை கட்டவும்,

**** திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளில் உள்ளாட்சி மன்ற பங்குகளுக்கு தொகை செலுத்தவும்,

**** சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் அமைக்கவும், புதுப்பிக்கவும்,

**** பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், அடக்கஸ்தலங்கள் ஆகியவற்றை பராமரிக்கவும்

முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தப்படவேண்டும்.








Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved