காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, 07.08.2015 வெள்ளிக்கிழமை 11.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணைச் செயலாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், அப்பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, வினியோத்தைத் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மேடையில் அங்கம் வகித்தோர் அனைவரும் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.
பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 151 மாணவர்களுக்கு இவ்விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை, பள்ளியின் ஆசிரியர்கள், அலுலவர்கள் செய்திருந்தனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளியில், 2014ஆம் ஆண்டில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |