கடந்த ரமழான் மாதத்தில், காயல்பட்டினத்தில் வாய்ப்பற்றவர்களுக்கு ஸஹர் (நோன்பு நோற்பு) உணவு ஏற்பாடுகள் சில தன்னார்வலர்களால் செய்யப்பட்டது. அதுகுறித்து, அவர்களால் வெளியிடப்பட்டுள்ள நிறைவறிக்கை வருமாறு:-
1. Re:...அழகிய முன்மாதிரி..... posted bymackie noohuthambi (kayalpatnam)[08 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41578
இது காலம் வரை நோன்புதுறப்பதற்கு பள்ளி வாசல்களில் கஞ்சி ஏற்பாடுகள் செய்தே பழக்கப் பட்டவர்களுக்கு நோன்பின் இன்னொரு பக்கம் சஹர் உணவு ஏற்பாடு செய்வது என்பது அரிதாகவே இருந்தது வீட்டில் கூப்பிட்டு இரவு நேரங்களில் இந்த ஏற்பாட்டை செய்வதற்கு வசதி இல்லாமல் இருந்தது. யாரும் அதை பற்றி சிந்திக்கவும் நினைவு இல்லாமல் இருந்தது. இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து நன்மைகளை அள்ளி குவித்துக் கொண்டுள்ள உதவியாளர்கள் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
அதிலும் குறிப்பாக அதற்கான வரவு செலவு கணக்குகளை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லா விட்டாலும் அதை ஒரு முன்மாதியாக இங்கே சமர்பித்துள்ள இக்லாசான எண்ணத்தையும் பாராட்டியே ஆக வேண்டும். கணக்கு கேட்பதில்தான் எத்தனையோ ஜமாத்களில், அரசியல் கட்சிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிவினைகள் ஏற்பட்டு சமுதாயத்தில் பிளவுகள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை நாம் இன்றைய வாழ்வில் கண்கூடா காண்கிறோம்.
''மயிரூடாடா நட்பு பொருளூடாட கெடும்'' என்று தமிழிலே ஒரு நீதிக் கதை சொல்வார்கள். நமது தலை முடி - ஒரு முடிக்கும் அடுத்த முடிக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு? அந்த இடை வெளி கூட இல்லாமல் நெருங்கி இருக்கும் நண்பர்கள் பணம் காசு என்று வரும்போது வெகுண்டு எழுகிறார்கள்.பிரிந்து செல்கிறார்கள். ஜன்மத்துக்கும் அவன் கண்ணில் முழிக்க மாட்டேன் என்று சபதம் செய்து, சில நேரம் அது ஜனாஸா தொழுகை வரை செல்கிறது. அல்லாஹ் பாது காக்க வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் புனித ரமலானில் இந்த நல்ல காரியம் சிறப்பாக நடை பெற அல்லாஹ் உதவி செய்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross