காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு (ஹிஃப்ழு மத்ரஸா)இன் குற்றாலம் இன்பச் சிற்றுலா, 03.08.2015 திங்கட்கிழமை மாலையில் துவங்கி, 06.08.2015 வியாழக்கிழமை இரவில் நிறைவுற்றுள்ளது.
ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிப் தலைமையில், மற்றொரு ஆசிரியர் ஹாஃபிழ் கே.எம்.எச்.முஹ்யித்தீன், பொறுப்பாளர்களான எஸ்.எம்.எஸ்.நூஹுத்தம்பி, ஃபரீத் மன்ஸூர், எம்.ஏ.எஸ்.முஹ்யித்தீன் தம்பி ஆகியோரின் ஒருங்கிணைப்பில், மத்ரஸாவின் 45 மாணவர்கள் இச்சுற்றுலாவில் பங்கேற்றனர்.
குற்றாலம் ஸ்டார் பங்களாவில் தங்கிய அவர்கள், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும், செங்கோட்டை அருகிலுள்ள குண்டாறு அருவியிலும் குளித்தும், பொழுதுபோக்கு அம்சங்களைக் கண்டுகளித்தும் வந்தனர்.
குற்றாலத்தில் இருந்த அனைத்து நாட்களிலும், சமையல் கலை வல்லுநர் காதிர் கைவண்ணத்தில், மாணவர்களுக்கு காலை - மாலையில் தேனீர், காலை உணவு, மதிய உணவு, இரவுணவு என அனைத்து வேளைகளிலும் பல்வகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
நகரின் இதர பகுதிகளைச் சேர்ந்த சிலரும் இதே நாட்களில் குற்றாலத்தில் சீசனை அனுபவிக்க வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கள உதவி:
S.M.S.நூஹுத்தம்பி
2011ஆம் ஆண்டில், ஹாமிதிய்யா மாணவர்களின் குற்றாலச் சிற்றுலா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு குற்றால சீசன் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |