எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வு எழுதியதில், பார்வையற்ற மாணவர் நன்மதிப்பெண் பெற்றுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த பிரபு முஹம்மத் யாஸீன் ஸிப்கத்துல்லாஹ் - வாவு உம்முல் ஃகைர் தம்பதியின் மகன் ஹாஃபிழ் எம்.ஒய்.ஹாரிஸ் ஹல்லாஜ்.
பார்வையற்ற மாணவரான இவர், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து ஹாஃபிழுல் பட்டம் பெற்றவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ஆம் வகுப்பு (ESLC) தனித்தேர்வெழுதி, 500க்கு 361 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, நடப்பாண்டு மார்ச் மாதத்தில் - 10ஆம் வகுப்பு தனித்தேர்வெழுதிய அவர், 500க்கு 404 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பாட வாரியாக அவரது மதிப்பெண்கள்: தமிழ் 073; ஆங்கிலம் 081; கணிதம் 089; அறிவியல் 070; சமூக அறிவியல் 091.
இவர், காயல்பட்டினம் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில் 08.02.2015இல் மீலாத் விழாவையொட்டி நடைபெற்ற திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியில் முதலிடம் பெற்றதும், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 28, 29, 30 நாட்களில், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி வளாகத்தில் - நஸூஹிய்யா மத்ரஸாவின் சார்பில் நடத்தப்பட்ட - தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் உம்றா பயணம் செல்லும் சிறப்புப் பரிசைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் Z.A.ஷெய்கு அப்துல் காதிர் |