காயல்பட்டினம் தொலைபேசி நிலைய துணைப் பொறியாளர் பீ.நம்பிராஜன், 30.06.2015 அன்று பணி நிறைவு பெற்றுள்ளார்.
அவருக்கு, 29.06.2015 அன்று காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்திலும், 30.06.2015 அன்று தூத்துக்குடி மண்டல அலுவலகத்திலும் வழியனுப்பு விழா நடைபெற்றது.
இவை குறித்தும், பொதுமக்களுக்குத் தேவையான சில தகவல்களையும் உள்ளடக்கி, பணி நிறைவு பெற்றுள்ள பீ.நம்பிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் தொலைபேசி நிலைய சந்தாதாரர் பெருமக்களே! எனது பணிவான வணக்கங்கள்!
P.நம்பிராஜன் SDE, BSNL காயல்பட்டினம் ஆகிய நான் 30.06.2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன்.
நான் 1976ஆம் ஆண்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்து, !982ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன்.
பின் டெலிபோன் இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஜூன் !982இல் சிவகங்கையில் பணியில் சேர்ந்து, மார்ச் 1987 வரை அங்கு பணியாற்றினேன்.
ஏப்ரல் 1987இல் காயல்பட்டினத்தில் டெலிபோன் இன்ஸ்பெக்டராக பணியில் மாறுதலாகி வந்தேன். ஏப்ரல் 1994 வரை காயல்பட்டினத்தில் பணியாற்றினேன். அப்பொழுது காயல்பட்டினம் தொலைபேசி நிலையம் 400 லைன் ஆக இருந்தது. நான் பணிபுரிந்த 1987-1994 வரை 400லிருந்து 500 ஆகவும், 500லிருந்து 600 ஆகவும் விரிக்கம் பெற்றது.
1994இலிருந்து 1998 வரை உடன்குடிக்கு மாற்றலாகிச் சென்று பணியாற்றினேன். உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் கேபிள் பதிக்கும் வேலையை செவ்வனே செய்தேன். 1998 ஜூன் மாதம் ஜூனியர் டெலிகாம் ஆபீஸர் பயிற்சி முடிந்து, திருச்செந்தூரில் இண்டோராக பணியில் சேர்ந்து, 2003 ஜூலை வரை பணியாற்றினேன்.
2003 ஜூலையில் காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்திற்கு ஜூனியர் டெலிகாம் ஆபிஸ் அவுட்டோராக பணியில் சேர்ந்தேன். திரு.ஜெயக்கொடி சப்டிவிஷனல் எஞ்சினியர் அவுட்டோராக பணியில் இருந்தார்கள். இருவரும் இணைந்து, அக்டோபர் 2013 வரை பணியாற்றினோம்.
திரு. ஜெயக்கொடி அவர்களோடு பணியாற்றிய 10 ஆண்டு காலமும் எனது பொற்காலமாகவே எண்ணுகிறேன். பழகுவதற்று இனியவர். இருவரும் காயல்பட்டினத்தில் எல்லா தெருக்களிலும், சந்துகளிலும், கேபிள் பதிக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்தோம்.
2013 அக்டோபரில் திரு ஜெயக்கொடி அவர்கள் DE ஆக பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடிக்கு மாற்றலாகிச் சென்றார்கள். 2013 அக்டோபரிலிருந்து 2015 ஜூன் வரை நான் தனியாகவே காயல்பட்டினம் தொலைபேசி நிலைய பணிகளை செய்தேன்.
2014 அக்டோபர் மழைக் காலத்தில் காயல்பட்டினத்தில் பெய்த பெருமழையால் ஊரே வெள்ளக்காடானது. பஞ்சாயத்திலிருந்து JCB வைத்து தண்ணீர் வடிக்க எல்லா தெருக்களிலும் தோண்டிய பொழுது, BSNL கேபிள்கள் மிகுந்த அளவில் சேதம் ஆயின. பழுதுகளைச் சரிசெய்ய மிகுந்த சிரமப்பட்டோம். காயல்பட்டினம் தொலைபேசி நிலைய ஊழியர்களின் ஒத்துழைப்போடு பழுதுகளைச் சரிசெய்ததை எனது பணிக்காலத்தில் சவாலான செயலாகக் கருதுகிறேன்.
தற்பொழுது காயல்பட்டினம் தெருவெங்கும் தண்ணீர் பைப் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களும் BSNL கேபிள்களை சேதமாக்கி விடுகின்றனர். உடனுக்குடன் சரிசெய்து வருகிறோம். காயல்பட்டினத்தில் எல்லா தெருக்களிலுமுள்ள தொலைபேசி கம்பங்களை அகற்றி உள்ளேன். ஜெயக்கொடி அவர்களும், நானும் இணைந்து 800க்கும் அதிகமான பிராட்பேண்ட் இணைப்புகளைக் கொடுத்து இருக்கிறோம்.
29.06.2015 அன்று, திரு. ஜெயக்கொடி DE தலைமையில் எனக்கு சிறப்பான பணி ஓய்வு விழா காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
30.06.2015 அன்று, மரியாதைக்குரிய GM, BSNL அவர்கள் தலைமையில் தூத்துக்குடி அலுவலகத்தில் சிறப்பாக முறையில் ஓய்வு விழா நடைபெற்றது.
திரு.ஏ.முருகன் புதிய SDE ஆக காயல்பட்டினத்தில் பணியில் சேர்ந்துள்ளார்கள். திரு. இ.ஜெயக்கொடி அவர்கள் DE ஆக திருச்செந்தூரில் பணியில் உள்ளார்கள்.
இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை இந்தியா முழுவதும் எல்லா மொபைல் போனுக்கும் இலவசமாக பேசும் வசதியை அனைவரும் பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். BSNLக்கு தொடர்ந்து தங்களது மேலான ஆதரவை அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டு பிரியாவிடை பெறுகிறேன்.
டெலிபோன் பழுது தொடர்பான எந்த புகார்களாக இருந்தாலும், 280198 என்ற எண்ணில் தொடர்புகொண்டால் பதில் கிடைக்கும். கணிணி முறையில் புகார் அளிக்க 198 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
நன்றி! வணக்கம்!
இவ்வாறு, பணி நிறைவு பெற்ற காயல்பட்டினம் தொலைபேசி நிலைய உதவி பொறியாளர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
BSNL தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |