தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டலத்தின் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் (REGIONAL DIRECTOR OF MUNICIPAL ADMINISTRATION - RDMA) மு. சீனி அஜ்மல் கான் - மதுரை மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மண்டல இயக்குனராக, கும்பகோணம் நகராட்சியின் ஆணையர் எஸ்.கலைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கலைச்செல்வன், கோயம்பத்தூரில் டிசம்பர் 26, 1957 இல் பிறந்தவர். கோயம்பத்தூர் நகராட்சி ஆண்கள் பள்ளியில் 1969-72 காலகட்டத்திலும், கத்ரி மில்ஸ் பள்ளியில் 1972-75 காலகட்டத்திலும் பள்ளி கல்வியை மேற்கொண்ட இவர், பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார்.
கலைச்செல்வன் - அரசு பணியில் 1986ம் ஆண்டு இணைந்தார். துவக்கமாக உதவியாளர் (ASSISTANT) மற்றும் துணை பிரிவு அதிகாரியாக (ASSISTANT SECTION OFFICER) சென்னை தலைமை செயலகத்தில் பணிப்புரிந்த இவர், 1997ம் ஆண்டு முதல் நகராட்சி நிர்வாகத் துறையில் பணிப்புரிந்து வருகிறார்.
செய்யார், திருமங்கலம், திருவாரூர், பரமக்குடி, மன்னார்குடி, கோவில்பட்டி, நாமக்கல், காரைக்குடி, திருவெற்றியூர் நகராட்சிகளில் ஆணையராக
பணிப்புரிந்துள்ள கலைச்செல்வன், இறுதியாக கும்பக்கோணம் நகராட்சியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆணையராக பணிப்புரிந்தார்.
இவரது பணிக்காலம் இவ்வாண்டு இறுதியில் (டிசம்பர் 31, 2015) நிறைவடைவதால், சுமார் 4 மாதங்கள் மட்டுமே இவர் நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் பொறுப்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. |