தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என்று சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிறகு 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கமாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்து கொள்ளப்படுவது வழக்கம். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசிய பிறகு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விரிவாக பதிலளித்து பேசுவார். சுமார் 1 மாதம் இந்த கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி, மே 23 ஆம் தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் உடனடியாக சட்டப்பேரவை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பரேவை உறுப்பினராக நின்று வெற்றி பெற்றார். இதனால் ஜூலையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்தனர் ஆனாலும் தேர்தல் முடிந்து 40 நாட்கள் கடந்தும் சட்டப்பேரவை கூட்டம் நடை பெறவில்லை.
இந்த நிலையில் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross