சுமார் 57 லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான டெண்டர் ஆகஸ்ட்
6 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் திறக்கப்பட்டது. யாருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படவில்லை.
இப்பணிகள் அனைத்திற்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம், நகர்மன்றத்தால் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
ஒப்புதல் வழங்கப்பட்ட 41 இடங்களில், 9 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கவும் (மொத்த மதிப்பீடு - 29.50 லட்சம் ரூபாய்),
அனுமதி வழங்கப்பட்ட 22 சாலைகளில், 8 சாலைகளை அமைக்கவும் (மொத்த மதிப்பீடு - 38.05 லட்சம் ரூபாய்) - தற்போது ஒப்பந்தப் புள்ளிகள்
கோரப்பட்டிருந்தன.
சாலைகளுக்கான டெண்டர் முடிவுகள்
(i) சிறு பள்ளிக்கு எதிர்புறம் தெருவில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல் (மதிப்பீடு - 4.50 லட்ச ரூபாய்)
(ii) செய்யது காலனி தெருவில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல் (மதிப்பீடு - 4.00 லட்ச ரூபாய்)
(iii) காயிதே மில்லத் நகர் தெற்கு பகுதி சாலை சுலைமான் ஒலி பள்ளி அருகில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல் (மதிப்பீடு - 6.20 லட்ச
ரூபாய்)
(iv) ஓடக்கரை தெற்கு தெருவில் (ஊ.ஒ.பள்ளிக்கு எதிர்புறம்) சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல் (மதிப்பீடு - 2.20 லட்ச ரூபாய்)
(v) மேல நெசவு தெரு சாலையில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல் (மதிப்பீடு - 6.10 லட்ச ரூபாய்)
(vi) புதுப்பள்ளி சாலையில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல் (மதிப்பீடு - 6.30 லட்ச ரூபாய்)
(vii) மெய்தீன் பள்ளி சாலையில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல் (மதிப்பீடு - 4.75 லட்ச ரூபாய்)
(viii) புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சாலையில் சிமெண்ட் கல் பதிக்கும் பணி செய்தல் (மதிப்பீடு - 4.00 லட்ச ரூபாய்)
இந்த சாலைகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஈ-டெண்டர் முறையில் அழைக்கப்பட்டிருந்தாலும், நேரடியாகவும் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டதாக
தெரிகிறது.
இந்த சாலைப்பணிகளுக்கு, ஈ-டெண்டர் (இணையதளம்) மூலம் எந்த ஒப்பந்தப்புள்ளிகளும் பெறப்படவில்லை என்றும்,
நேரடியாக பெறப்பட்ட
ஒப்பந்தப்புள்ளிகள் அடிப்படையில் - 4 சாலைகள், சர்ச்சைக்குரிய ஒப்பந்ததாரர் தளவாணிமுத்துவிற்கும், 4 சாலைகள் ஒப்பந்ததாரர் குமரேசனுக்கும்
வழங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்ட 22 சாலைகளில் கடந்த ஆண்டே டெண்டர் விடப்பட்ட 6 சாலைகளில், தலா 3 சாலைகளை ஒப்பந்ததார் தளவாணிமுத்து மற்றும் ஒப்பந்ததார் குமரேசன் ஆகியோர் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் கோபுர மின் விளக்குகளுக்கான டெண்டர் முடிவுகள்
உயர் கோபுர மின் விளக்குகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஈ-டெண்டர் முறையில் அழைக்கப்பட்டிருந்தாலும், நேரடியாகவும் ஒப்பந்தப்புள்ளிகள்
பெறப்பட்டதாக தெரிகிறது.
இந்த உயர் கோபுர மின் விளக்கு பணிகளுக்கு, ஈ-டெண்டர் (இணையதளம்) மூலம் 3 ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டது என்றும்,
நேரடியாக 2
ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டது என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 6 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் நகராட்சியில் திறக்கப்பட்ட போது, இணையதளம் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்திருந்த 3
ஒப்பந்த்தாரர்களில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் நேரடியாக வந்திருந்ததாகவும், நேரடியாக ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்திருந்த இரண்டு ஒப்பந்ததாரர்களும்
நேரடியாக வந்திருந்ததாகவும் தெரிகிறது.
ஒப்பந்தப்புள்ளிகளை திறக்க குறிப்பிடப்பட்ட நேரத்தில் - இணையதளம் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை திறக்க முடியவில்லை என
அதிகாரிகள் - அதில் பங்கேற்று, நேரில் வந்திருந்த அந்நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். அதனை திறக்க 3 நாட்கள் ஆகும்
என்றும், திருநெல்வேலியில் இருந்து இதற்கான நிபுணர் வர வேண்டும் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிறகு - நேரடியாக பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் மட்டும் - அன்று திறக்கப்பட்டு, கோரப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளி தொகை அறிவிக்கப்பட்டதாக
தெரிகிறது.
நேரில் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்திருந்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி, தான் குறிப்பிட்டிருந்த தொகையை விட 40 சதவீதம்
குறைக்க தற்போது தயாராக இருப்பதாக அவ்வேளையில் தெரிவித்துள்ளார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையதளம் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், மறு நாள் (ஆகஸ்ட் 7) திறக்கப்பட்டதாக, தமிழக அரசின் டெண்டர் இணையதளம்
தெரிவிக்கிறது. அவ்விணையதளத்தில் உள்ள விபரப்படி, 9 உயர் கோபுர மின் விளக்கு பணிகளுக்கு, பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விபரங்கள்
வருமாறு:
(i) கோமான் பள்ளி அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல் (மதிப்பீடு - 3 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 2,24,300
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 2,17,750
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 2,59,410
(ii) மொஹுதூம் தெரு - மொஹிதீன் தெரு சந்திப்பு அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல் (மதிப்பீடு - 3 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 2,24,300
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 2,20,022
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 2,54,910
(iii) சிறு பள்ளி அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல் (மதிப்பீடு - 3 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 2,24,300
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 2,19,000
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 2,58,510
(iv) YUF சங்கம் அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல் (மதிப்பீடு - 3 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 2,24,300
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 2,17,500
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 2,59,410
(v) பரிமார் தெரு சந்திப்பில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல் (மதிப்பீடு - 3 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 2,24,300
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 2,19,750
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 2,57,610
(vi) பெரிய நெசவு தெரு தெற்கு பகுதி ஜாபர் சாதிக் தர்கா (IOB வங்கி அருகில்) உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல் (400 வாட்ஸ்)
(மதிப்பீடு - 5.5 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 4,11,600
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 4,65,500
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 4,86,000
(vii) ஓடக்கரை மெயின் பகுதியில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல் (மதிப்பீடு - 3 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 2,24,300
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 2,18,000
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 2,57,610
(viii) ரெட் ஸ்டார் சங்கம் அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல் (மதிப்பீடு - 3 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 2,24,300
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 2,18,000
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 2,57,610
(ix) காட்டு தைக்கா தெரு அருசியா பள்ளி அருகில் சிறிய உயர் கோபுர மின் விளக்கு (LED) அமைத்தல் (மதிப்பீடு - 3 லட்ச ரூபாய்)
(a) Dowell Associates - கோரிய தொகை: 2,24,300
(b) Perfect Engineering (Mysore) Works - கோரிய தொகை: 2,18,215
(c) Prompt Engineering Company - கோரிய தொகை: 2,54,910 |