| |
செய்தி எண் (ID #) 16361 | | | செவ்வாய், ஆகஸ்ட் 4, 2015 | குற்றாலத்தில் கிழக்கர்கள் படையெடுப்பு! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4360 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய | |
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை சீசன் காலமாகும். இப்பருவத்தில் அருவிகளில் தண்ணீர் கொட்டும். காயலர்களின் படையெடுப்பும் சீசன் முழுக்க இருக்கும்.
நடப்பாண்டும் கடந்த ஜூலை மாதம் முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து நன்றாக உள்ளது. எனினும், ஜூலை மாதம் ரமழான் மாதமும் இணைந்திருந்தமையால், நோன்பு நோற்ற நிலையில் குற்றாலப் பயணத்தைத் தவிர்த்திருந்தனர்.
ரமழான் மாதம் முடிவுற்றது முதல் காயலர்களின் பயணம் துவங்கியது. நாள்தோறும் சுமார் 5 முதல் 6 குழுவினர் தனி வாகனங்களில் சமையல் ஏற்பாடுகளுடன் சென்று 2 முதல் 5 நாட்கள் வரை முகாமிட்டு, அருவிகளில் குளித்து இன்புற்று வருகின்றனர்.
தற்போது ஐந்தருவியில் ஓரளவுக்கும், மெயின் அருவியில் குறைவாகவும் தண்ணீர் வரத்து உள்ளது. மெயின் அருவியில் - நியாயவிலைக் கடையில் இலவச வேஷ்டி சேலை வாங்க வரிசையில் காத்திருப்பது போல பொதுமக்கள் குளிப்பதற்காகக் காத்திருக்கின்றனர். காவல்துறையினர் ஒவ்வொரு குழுவினராக சுமார் 10 நிமிடங்கள் குளிக்க அனுமதித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாத கடைசி வாரத்தில் காயல்பட்டினம் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 45 பேர் குழுவாகப் புறப்பட்டு, குற்றாலம் ஸ்டார் பங்களாவில் சுமார் 3 நாட்கள் முழுமையாக முகாமிட்டு, சீசனை அனுபவித்து வந்துள்ளனர். அங்கு நடைபெற்ற சாரல் விழாவிலும் அவர்களுள் பலர் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வந்துள்ளனர். காட்சிகள் வருமாறு:-
கள உதவி:
குளம் M.I.மூஸா நெய்னா
குற்றாலக் குளியல் தொடர்பான முந்தைய செய்திகளை, பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்!
(1) 2013 ஆகஸ்ட் 24 (2) 2013 ஜூலை 09 (3) 2012 செப்டம்பர் 07 (4) 2012 ஜூலை 19 |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|