காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.எம். மொஹிதீன் என்ற மும்பை மொஹிதீன் தலைமையில் - ஜூலை 27, திங்கள் அன்று
காலை 10:30 மணியளவில் - நகர்மன்ற வளாகத்தில் - கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் சட்டத்திற்கு புறம்பான வகையில் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இக்கூட்டத்திற்கான பின்னணி விபரங்களையும் - நகர்மன்றத்
தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பதிவில் - ஜூலை 26 அன்று - தெரிவித்திருந்தார்.
நகர்மன்றத் தலைவரின் ஆட்சேபனையை மீறியும் இக்கூட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இக்கூட்டத்தினை எதிர்த்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், கடந்த திங்கட்கிழமை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு
தொடர்ந்தார். நீதிபதி மணிக்குமார் முன் இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
கூட்டம் நடைபெற்று முடிந்து விட்ட காரணத்தால், இவ்வழக்கினை ஏற்றுக்கொள்ள கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கு [WP(MD) 13783/2015], மீண்டும் இன்று நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, தற்போதைய நிலை நீடிக்க (STATUS QUO) உத்தரவிட்டார்.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் சார்பாக அஜ்மல் அசோசியேட்ஸ் குழம வழக்கறிஞர் மெஹபூப் ஆதிப் ஆஜரானார். |