இந்திய நாட்டின் தலைசிறந்த விஞ்ஞாணியும், முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திய மாணவர்களின் தலைசிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவருமான ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம், 27.07.2015 திங்கட்கிழமையன்று 19.30 மணியளவில் காலமானார். அவரது உடல், 30.07.2015 வியாழக்கிழமையன்று - அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் - இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவை முன்னிட்டு, ஹாங்காங் தமிழ்க் கலாச்சார சங்கம் சார்பில் 01.08.2015 சனிக்கிழமையன்று 18.50 மணியளவில், ஹாங்காங் TST Ferry Pier பகுதியிலுள்ள Clock Tower அருகிலிருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு, ஹாங்காங் கவ்லூன் மிராமர் ஷாப்பிங் மால் எதிரிலுள்ள Piazzaவில் நிறைவுற்றது.
இப்பேரணியில், காயலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
இம்ரான் உஸைர்
|