உலக தாய்ப்பால் வாரம்: காயல்பட்டினம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில், குழந்தைகளுக்குப் பாலூட்ட தனியறை! தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்!
ஆகஸ்ட் 01 முதல் 07ஆம் நாள் வரை உலக தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, காயல்பட்டினம் பேருந்து நிலையம் உட்பட - தமிழகத்தின் 351 பேருந்து நிலையங்களில், மகளிர் தம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டுவதற்காக தனியறைகளையும், அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் வங்கிகளையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
காயல்பட்டினத்தில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டதையடுத்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலூட்டும் மகளிருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார். அதிமுக மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் உடன் கலந்துகொண்டனர்.
1. Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[05 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41537
பாலூட்டும் தாய்மார்கள் நலனில் தனி அக்கறை செலுத்தும் வகையில், பாலூட்டுவதற்கு ஏதுவாக நமது பேருந்து நிலையத்தில் தனி அறைகளை திறந்து வைத்தார் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்.
மகளிர் தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொள்ளும் வகையில் 'Breastfeeding and Work-Let's Make it Work' என்ற கருப்பொருளைக் கொண்டு இந்த ஆண்டு உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, தாய்ப்பால் ஊட்டுவதில் பணிபுரியும் தாய்மார்களுக்கு உள்ள இடர்ப்பாடுகளைக் களைவதன் மூலம் அவர்கள் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும்போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. தங்கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கதாய்ப்பால் மிகவும் அவசியம்.எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக செய்துகொள்ளலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross