காயல்பட்டினம் நகராட்சியில் 8 இடங்களில் சாலைப் பணிகளுக்கும் (மொத்த மதிப்பு - 38.05 லட்சம் ரூபாய்), 9 இடங்களில் சிறிய உயர் கோபுர விளக்குகளுக்கும் (மொத்த மதிப்பு - 29.50 லட்சம் ரூபாய்) - தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஜூலை 13 தேதிய இந்த டெண்டர் அறிவிப்பு, ஜூலை 24 அன்று https://tntenders.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4 வரை ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், ஆகஸ்ட் 5 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிக்க இறுதி தினம் என்றும், அன்றே ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான அனுமதி கடந்தாண்டு கொடுக்கப்பட்டது என தெரிகிறது.
[ஜூன் 2014இல் ஒப்புதல் கொடுக்கப்பட்ட 22 தெருக்களில், 6 தெருக்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 2014 இல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அவைகளுக்கு (மதிப்பீடு - 43.15 லட்ச ரூபாய்) நவம்பர் 2014 கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த 6 தெக்ருகளில் - ஆரம்பள்ளி தெரு தவிர்த்து, பிற தெருக்களில் பணி சில வாரங்களுக்கு முன் நிறைவுற்றுள்ளது என தெரிகிறது. ஆரம்பள்ளி தெரு சாலைப்பணிகள் தற்போது துவங்கியுள்ளன. மீதி இருந்த 16 தெருக்களில், 8 தெருக்களுக்கு தற்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.]
சாலைப் பணிகள்
தெரு விளக்கு பணிகள்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 2:45 pm / 6.8.2015] |