ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜூலை 18 சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாளை முன்னிட்டு, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில், அன்று காலை 09.30 மணியளவில், ஜெய்ப்பூர் நகரிலுள்ள முஹல்லா பிஸாத்தியானில் அமைந்திருக்கும் தகாடியா மஸ்ஜிதில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
மவ்லவீ ஹாஃபிழ் ஃகல்ஜீ ஃபாஸீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிகளில் ஜெய்ப்பூர் வாழ் காயலர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
படங்கள்:
ஜெய்ப்பூரிலிருந்து...
B.M.லுக்மான் மவ்லானா
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |