செய்தி: ஒரு தவறான செயலுக்கு என் கைகள் என்றும் துணைப் போகாது: ஜூலை 27 கூட்டம் குறித்து நகர்மன்றத் தலைவர் முகநூலில் கருத்து பதிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[27 July 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41421
நகர்மன்ற தலைவர் அவர்களே..! நீங்கள் நேர்மையாக நீதியாக அரசு நிர்வாகத்தில் ஈடுபட்டால், தலையிட்டால் பல சோதனைகள், மிரட்டல்கள், விமர்சனங்கள் வருவது வாடிக்கை தான்...! நிர்வாகத்தில் ஒரு தவறான செயலுக்கு உங்கள் கைகள் எப்போதும் துணைப் புரியுமென்றால் சோதனைகள், மிரட்டல்கள், விமர்சனங்கள் தவிர்க்கப்படும்.! இதை தான் உள்ளூர் ஆளும் கட்சியின் பொறுப்பிலுள்ள நபர்களும் விரும்புகிறார்கள்.. அவர்களின் தேவையை உடல் உழைப்பில்லாமல் காலத்தை ஓட்டவேண்டும் அல்லவா..!
ஆணையருக்கும் சில உறுப்பினர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நகராட்சியில் எந்நேரமும் புரோக்கர் வேலை செய்யும் எடுபிடிகளுக்கு வாக்காலத்து பேசும் எவராவது கொஞ்சம் விளக்கம் / விபரம் தர முடியுமா...!
ஆணையரால் இதுவரை 2015-16 ம் ஆண்டிற்கான (உத்தேச வரவு - செலவு அறிக்கை) பட்ஜெட் தயார் செய்து நகர்மன்ற தலைவருக்கோ..! நகர்மன்றத்தின் 18 உறுப்பினர்களுக்கோ..! வழங்க படவில்லை என அறிகிறேன், ஆனால் தமிழக அரசோ 2015 - 2016 நிதியாண்டுக்கு, காயல்பட்டினம் நகராட்சிக்கு மானியமாக பல லட்சங்கள் வழங்கி வருகிறது..!
நமது நகராட்சியின் ஆணையர் திரு, காந்திராஜ் நமது வரி பணம் குறித்த உண்மையான பல வரவு - செலவு தகவல்களை மறைத்து பொய்யான / முரண்பாடான வரவு - செலவு அறிக்கையை சமீபத்தில் தலைவரிடம் அளித்தாராம்..!
அதில் உதாரணமாக, மாநில நிதிக்குழு மானியம் (SFC) வகை வரவு 80 லட்சம் என குறிப்பிட்டுள்ளாராம். ஆனால் - நகர்மன்ற தலைவர் கூறுகிறார் இவ்வகை வருவாய் 3 கோடி ரூபாய்க்கும் மேல், ஒவ்வொரு ஆண்டும் நமது நகராட்சிக்கு வருகிறதாம் - ஆணையர் தவறான தகவல் காட்ட காரனமேன்னே..? இந்த உறுப்பினர்களும் இது விசியத்தில் மவுனம் காப்பது ஏன்..?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross