கோரிக்கை நியாயமானதே! posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[28 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4149
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
ஆறுமுகநேரி பொது மக்களின் கோரிக்கை நியாயமானதே!
புறவழிச்சாலை வழியாக பயணியர் பேருந்து செல்ல அனுமதி கிடையாது என்ற விதி இருக்கும்போது அவ்வழியே பல பேருந்துகளும் சென்றால் அது தவறுதான். இதனால் பேருந்துக்காக ஆறுமுகநேரியில் காத்திருக்கும் பயணியர் ஏமாற்றமடைவதோடு, குறித்த நேரத்தில் உரிய பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போகிறது என்பதும் உண்மைதான்.
இதன் காரணமாக, புறவழிச்சாலை வழியாக சென்ற பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி ஆறுமுகநேரி வழியாக திருப்பிவிட்டது நியாயமான செயலே!
---------------------------------
இதுகுறித்து பலமுறை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிடப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அது வருத்தத்திற்குரியது.
இப்படி ஒவ்வொரு முறையும் பேருந்துக்காக காத்திருந்து ஏமாற்றமடையும்போது காத்திருப்போருக்கு மன உளைச்சளை ஏற்படுத்தும். மேலும் புறவழிச்சாலையில் சென்ற பஸ்ஸை நிறுத்தி ஆறுமுகநேரி வழியாக சரியான பாதையில் திருப்பிவிட்டாலும் அந்த பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் அந்த நேரத்தில் அது சிரமமாகத்தான் தெரியும், ஏதோ மணி கணக்கில் தாமதம் ஏற்படுவது போல.
எனவே முறையாக நேரான வழித்தடத்தில் சென்று வந்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அனாவசியமான மன உளைச்சளை தவிர்க்கலாம்.
----------------------------------------
பொதுவாக அதிகாரிகள் வழித்தடங்களை ஓட்டுனர்களுக்கு முறைப்படுத்திக் கொடுத்திருந்தாலும் சில நேரங்களில் கவனக் குறைவினால் ஓட்டுனர்கள் வழித்தடங்களை மாறி செல்வதுமுண்டு.
சில நேரங்களில் ஆறுமுகநேரியில் இறங்க பயணிகள் இல்லை என்றாலும் ஒரு வேளை அந்த பஸ்ஸில் மேலும் பிரயாணிகளை ஏற்ற இடம் இல்லை என்றாலும் கூட புறவழிச்சாலையில் செல்வர் அதுவும் தவறுதான்.
மேலும் எல்லா நாட்களும் ஒரே ஓட்டுனர் வருவதில்லை, புதிதாக வரும் ஓட்டுனர்களுக்கு நேர்வழிச் சாலையும், புறவழிச்சாலையும் புலப்படுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
எதுவானாலும் சரி ஓட்டுனர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக சென்றால்தான் மக்கள் எதிர்பார்த்திருந்த பேருந்து வந்தது, வராததை அறிந்து அதற்கேற்றாற்போல் தங்கள் தேவையை நிவர்த்தி செய்யமுடியும்.
------------------------------------
ஆறுமுகநேரி பொதுமக்களே!
நீங்கள் அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதுடன், புறவழிச்சாலை திரும்பும் இடத்திலும், புறவழிச்சாலை வருவதற்கு முன்பு 300, 400 அடி தூரத்திலும் மிக தெளிவாக தெரிகிற மாதிரி இரண்டு பெரிய போர்டுகளை வைக்க ஏற்பாடுகள் செய்யுங்கள். அதில் பயனியர் பேருந்துகள் ஆறுமுகநேரி வழியாகத்தான் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துங்கள்.
-------------------------------------
காயல்பட்டணம் பொதுமக்களே!
நமக்கும் இது மாதிரி வழித்தடம் மாறி போகிறதை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு புகார் கொடுப்பதுடன், பெரிய அளவிலே போர்டுகளை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்வது நல்லது. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross