நன்றி கெட்டவர்! posted byகவிமகன் (துபாய்)[29 April 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4156
பேரறிஞர் அண்ணாவின் மரணத்திற்குப்பிறகு தலைமைப் பொறுப்பிற்காக MGR அவர்கள் போட்டியிட்டார் என்பது தவறான தகவலாகும். மாறாக புரட்சித் தலைவர் அவர்களது ஆதரவுடன், நெடுஞ்செழியனைத் தோற்கடித்து கருணாநிதி முதல்வர் ஆனார் என்பதே வரலாறு.
தன்னை முதல்வராக்கிய MGR அவர்களையே, யானை தனது தலையிலேயே மண்ணை வாரிக்கொட்டுவது போல, கட்சியை விட்டு தூக்கி எறிந்தது, கருணாநிதியின் ஆணவத்திற்கும் நன்றி கெட்ட தனத்திற்கும் இன்றும் வரலாற்றுச் சான்றாய் அமைந்திருக்கிறது.
தனது வயதான காலத்தில், ஆறு மாத காலத்திற்கு முன், தன்னை முதல்வராக்கி அழகு பார்த்தவர் நண்பர் MGR என்று கருணாநிதி பேசியது சட்டமன்றக் குறிப்பேட்டில் பதிவாகி இருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross