செய்தி: தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் கோடை விடுமுறையில் ஸ்பெஷல் க்ளாஸ் நடத்தினால் நடவடிக்கை! முதன்மை கல்வி அதிகாரி கடும் எச்சரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஓடி விளையாடு பாப்பா...?எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கில்லே..? posted byM.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.)[30 April 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4163
டண்டனக்க... டண்டனக்கா... அப்படி போடுன்ணானாம்! வருஷம் முழுவதும் பள்ளி, பள்ளிக்கூடம், ஸ்பெஷல் க்ளாஸ், நாலு மணிக்கு வீட்டுக்கு வந்ததும் பேக்கை கீழே வைக்கிறதுக்குள்ளெ ஓடு, ஓடு, டிடூஷனுக்கு, அலைத்துக் களைத்து மீண்டும் வந்தா எடு பலகையை(கிதாபை)அதுக்கு மேலே ஹோம் ஒர்க்கு, கை ஒடிய எழுதித்தள்ளி சடவு முறிச்சா சனியன் சனியன்ணு திட்டு வேறே!
பத்து மணிக்கெல்லாம் லைட்ஸ் ஆஃப், அவங்க மட்டும் சவுண்டைக் குறைத்து வைத்து நாசமாப் போன சீரியல் பார்த்தா தான் உண்ட சோறு செமிக்கும்! அதிகாலையில் அசந்து தூங்கிட்டா போதும் அன்றைக்கு வீடெ கலவர பூமிதான்!படி, படி, படி, குழந்தையின் காதுகளில் இடியாய் விழுந்து தொலைக்கும்! தன் பிள்ளை படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆவலில் தவறில்லை! அனால், அரை மார்க் குறந்து விட்டால் நரம்புத்த்ளச்சிக்கு ஆளாகின்றனரே அதுதான் கொடுமை!
நீங்க உங்க வயசுலெ இந்த பாடத்தைப் படிக்கவுமில்லை! ஃபஸ்ட் மார்க் எடுக்கவுமில்லை! அப்புறம் ஏன் இந்த வெறி? மழலைகளின் மனநிலையைப் பற்றி என்றைக்காவது சிந்தித்ததுண்டா? மாலை முழுதும் விளையாட்டுண்ணு படித்துவிட்டு வரும் பிள்ளைகளுக்கு பாடச் சுமையைத் திணிக்கும் பள்ளிகள் ஒழிந்து போகட்டும்!
பசுமரத்தாணிக்கு பதிலாக கடப்பாரையைக் கொண்டு மழலைகளின் மனதைக் குத்திக்கிழிக்கும் பெற்றோர்களே... வேண்டாம். திருந்திக் கொள்ளுங்கள்!!! உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் அவர்தம் மதிப்பெண்கள் உயரும்! வெறும் பொதி சுமக்கும் கழுதைகள் அல்ல அவர்கள்! உங்கள் கண்மணிகள்!கல்விப் பாலை புட்டியில் புகட்டினால் போதும். தயவுசெய்து பீப்பாக்களில் அடைத்துப் புகட்டாதீர்கள்! இச்சட்டத்தை இயற்றிய கல்வித்துறைக்கு என் இருகரம் நெற்றியில் வைத்து ஓர் ஸ்ல்யூட்!!! வெல்டன்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross