செய்தி: நகர்மன்றத் தலைவரின் கவனத்தை ஈர்க்க ஆக. 18 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! இ.யூ.முஸ்லிம் லீக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யாரை காப்பாற்ற இந்த ஆர்ப்பாட்டம்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[17 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41660
காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிளுக்கு - பொறுப்பாளர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு 14 கேள்விகள்..!
அன்பர்களே..! நான் சுட்டிக்காட்டும் கீழுள்ள அணைத்து குற்றசாட்டும் உங்களின் கவனத்திற்கு வரவில்லை என தயவு செய்து மறுக்காதீர்கள்..!
1) அப்போதைய நகர்மன்ற மன்ற துணை தலைவர் நகராட்சி காசோலை மூலம் முறைகேடாக பணத்தை கையாடல் செய்தது.
2) சமீபத்தில் - நகராட்சியில் வாங்கபடாத கணினிக்கு காசோலை விநியோகம்..
3) சமீபத்தில் - நகராட்சியில் வாகன பயன்பாட்டுக்கு வாங்கும் எரிபொருளில் முறைகேடு...
4) சமீபத்தில் - நகராட்சி வசூல் மையத்தில் வசூலாகும் வரி பணத்தை வங்கியில் செலுத்தாமல் நகராட்சி ஊழியர்கள் கொள்ளை..
5) சமீபத்தில் - போட்ட சாலைகள் (நெய்னார் தெரு - அப்பாபள்ளி தெரு) ஆறு (6) மாதம் கூட ஆகவில்லை ஒரு சிறு மழையில் (சேதராம்) ஜல்லிகள் கரைந்தோடும் அவலம்.
6) சமீபத்தில் - காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் - சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் துவங்கப்பட்டது.
7) சமீபத்தில் - சர்வே எண் 278 இடத்தில் முறைகேடாக துவக்கப்பட்ட பயோ காஸ் திட்டப்பணிகளுக்கு (முறைகேடுக்கு ஆதரவாக - தவறு செய்த அலுவலர்களுக்கு ஆதரவாக) ஐக்கிய பேரவை செயல்பட்டது.
8) சமீபத்தில் - சர்வே எண் 278 இடத்தில் CRZ பகுதியில் (தடை செய்யப்பட்ட பகுதி) மக்கள் வரி பணத்தில் 1.5 ஏக்கரில் சாலை அமைக்க நகராட்சி ஆணையர் முயற்சி செய்தது.
9) நகரில் பல நோய்களுக்கும் உயிர் பலிகளுக்கும் காரணமாக சந்தேகிக்கும் D C W இரசாயன தொழிற்சாலைக்கு முறைகேடாக சமீபத்தில் நகராட்சி அலுவலர்களால் வழங்க பட்ட ஆலை விரிவாக்க கட்டிட அனுமதியை ரத்து செய்ய கோரி நகர்மன்ற தலைவர் திருமதி ஆபிதா சேக் அவர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை பெருவாரியான உறுப்பினர்கள் அதை ஆதரிக்காமல் இருந்தது.
10) அப்போதைய மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் வெளிவந்த - சாலை அமைப்பதில் முறைகேடுகள்.
11) நகரின் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டும் அவர்கள் காயல்பட்டினம் நகராட்சியில் புறக்கணிக்கப்பட்டு பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேடாக நகராட்சியில் பணி நியமனங்கள்..
12) மக்கள் வரி பணம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மொகுதூம் ஜும்மா பள்ளியின் மையவாடியில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அனாதையாக கேட்பாரற்று முடங்கி கிடக்கும் நகர்மக்களின் ஜீவாதாரமான குடி நீர் தேக்க தொட்டி - நகராட்சி மூலம் கட்டப்பட்டு மக்களுக்கு பயன்தராத அவமான சின்னம்.
13) சமீபத்தில் - நகரின் கடற்கரையில் மர்ம படகுகள் மூலம் நகருக்கும் நகரின் மக்களுக்கும் அச்சுறுத்தல்.
14) சமீபத்தில் - நகரின் புதிய பேருந்து நிலையதில் மது விற்பனை - சமுதாய சீரழிவுகள் மற்றும் பல போதை பொருட்கள் விற்பனை.
இது போன்ற பல்வேறு முறைகேடுகள் - சீரழிவுகள் நடந்த வந்த போது - இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க சமுதாய கட்சி என மார்தட்டி கொள்ளும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் - ஊழியர்கள் இந்த நகர் நலனுக்காக இந்த நகர் மக்களின் நலனுக்காக அரசுக்கும் - அது சார்த்த துறைக்கும் தெரிவிக்கும் வகையில் என்ன நடவடிக்கை அல்லது என்ன ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறீர்கள்..? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..! பார்க்கலாம்..!
காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அன்பர்களே..! அல்லாஹுக்கு பயந்து உங்கள் மனசாட்சியை ஒரு நிமிடம் நினைவு படுத்தி கொண்டு உண்மையை கூறுங்கள்..!
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டு பார்த்து சொல்லுங்கள் என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது..!
இப்படியொரு ஆர்ப்பாட்டம் நடத்த சொல்லி எங்கிருந்து உத்தரவு வந்தது..? அதை நகர் மக்கள் மிக தெளிவாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்..!
சத்தியம் வென்றே தீரும் - அசத்தியம் தோல்வியே பெறும் - இதுவே கடந்த கால 2011 ன் உதாரணம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross