“காரணத்தையா தேடனும்? ஊர்ல கடும் வெயில்! தலைவிதான் அதுக்கு காரணம்ன்னு சொல்லி பண்ணுவோம்... ஒருவேள மழை பெஞ்சிட்டா, அதுக்கும் அவள்தான் சதி செஞ்சாம்போம்... நம்புறதுக்கு நம்மகிட்ட வெவரங்கெட்ட மக்கள் இருக்கிற வரைக்கும் நமக்கென்ன கவலை?”
இப்படி ஒரு உரையாடல் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னர் நடந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
மண்டைய குடையுற சில கேள்விகளை வழமை போல கேட்டுத் தொலைக்கிறேன்...
(1) நகராட்சி, பேரூராட்சி போன்ற ஒரு உள்ளாட்சியில ஊர் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்ற மட்டும்தான் தலைவருக்கு அதிகாரம் உண்டு! அதைத் தாண்டி, அக்காரியம் நடைபெறவில்லையெனில், அது அந்த உள்ளாட்சியின் மூத்த அதிகாரியான ஆணையாளர் / செயல் அலுவலர் இடம் கேட்க வேண்டியது என்ற அல்ப விஷயம் கூட ஒரு அகில இந்திய கட்சிக்குத் தெரியாதா?
(2) இந்திய அரசியல் சாசனத்தை மதிப்பது தாய்ச்சபையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று என்று மேடைக்கு மேடை மார்தட்டுவீர்களே...? இங்கு தலைவி அரசியல் சட்ட விதிகளுக்கு மாற்றமாக நடைபெற்ற ஒரு கூட்டத்தைத்தானே அவர் ஆட்சேபித்து வழக்கு தொடுத்து, தடையாணை பெற்றுள்ளார்? அதில் என்ன தவறைக் கண்டுவிட்டீர்கள் தாய்ச்சபைத் தங்கங்களே?
(3) ஜமாஅத் பிரதிநிதிகள் எல்லாம் கலந்துகொள்வார்கள் என்று உங்க ஆர்ப்பாட்ட செய்தி, நோட்டீஸ்களில் அறிவித்திருந்தீர்களே? அவங்களுக்கு அழைப்பிதழ் அட்ரஸ் மாறி போயிடுச்சா அல்லது உங்கள் தரத்தை அவங்களும் விளங்கிக் கொண்டார்களா?
(4) கடந்த முறை ரயில்வே துறையை எதிர்த்து நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட தமுமுக, எஸ்டிபிஐ, ததஜ போன்ற அமைப்புகள் எல்லாம் கலந்துகொண்டனவே? இப்ப அவங்களுமா உங்களை நம்பவில்லை?
அவங்க போயிட்டுப் போறாங்க! “வஞ்சிக்கப்பட்ட வாலிபர்” கூடவா உங்களை நம்பவில்லை? போன ஆர்ப்பாட்டத்தில் மக்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு முன்னணியில் செயல்பட்ட அவரையும் காணோமே? தெரியாமத்தான் கேட்கிறேன்.
(5) சரி போகட்டும்! நீங்க எந்த அரசியல் சாசனத்தை மதிப்பதாகக் கூறுகிறீர்களோ அதைச் செயலில் காண்பித்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு எதிராக, அரசியல் சட்டங்களை சிறிதும் மதிக்காமல் சட்டத்திற்குப் புறம்பாகக் கூட்டம் நடத்திய நான்கு கவுன்சிலர்களும் கூட உங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்களே? அவர்களில் ஒருவரை மேடையில் வைத்து அழகு பார்த்துள்ளதோடு, இருவருக்கு மைக் பிடித்து பேசவும் செய்துள்ளீர்களே.....? எப்போது இவர்களெல்லாம் மனிதப் புனிதர்கள் ஆனார்கள்?
(6) சரி, வந்தது வந்துட்டாங்க! “ஏம்ப்பா! உங்க நகராட்சியில ஆயிரத்தி சொச்சம் தீர்மானம் போட்டிருக்கீங்களே? அதில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெறவில்லை என்று குதிக்கிறீர்களே? அப்படி செயல்வடிவம் பெறாததைக் கண்டித்து, ஏன் இந்த வேலையைச் செய்யவில்லை என தலைவி அவர்கள் பலமுறை ஆணையருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியிருக்காங்களே...? நீங்க எத்தனை முறை இதுகுறித்து ஆணையரிடமும், உயர் அதிகாரிகளிடமும் தட்டிக் கேட்டிருக்கீங்க?” என்று கேட்பதற்குக் கூட யோசனை வராத அளவுக்கா குச்சி மிட்டாய் சூப்பிட்டு இருந்தீங்க?
மொத்தத்தில் சொல்கிறேன்! நம்ம ஊர்ல இரண்டே வகையான கட்சிகளும், அமைப்புகளும்தான் படைகளாக உள்ளன. (1) காக்காவின் காலடியே தஞ்சமெனக் கிடக்கும் கூலிப்படை. (2) என்ன சோதனை வந்தாலும், எத்தனை பேர் இழித்தும் பழித்தும் பேசினாலும், கொண்ட கொள்கையில் சிறிதும் மாற மாட்டேன் என நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போடும் கூட்டம்.
இதில் இரண்டாவது வகையில் நாங்கள் இல்லவே இல்லை என்பதை சத்தியமிட்டுச் சொல்வது போலவே உள்ளது அகில இந்திய கட்சியான உங்கள் தாய்ச்சபையின் உள்ளூர் தங்கங்களின் செயல்பாடுகள்!
ஊர்ல உள்ள சமுதாய அமைப்புகள்ல அடிக்கடி “தாய்ச்சபை” செய்தியில் இடம்பெறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள், “அடடே... பரவாயில்லையே?” என்று நினைத்து வரும் நேரத்தில், மிகச் சரியாக எங்களுக்கு உஷார் காட்டி, “சேச்சே... எங்கள அப்டியெல்லாம் தப்பா நெனச்சிடாதீங்க”ன்னு சொல்லிட்டீங்களே! சபாஷ்!!!
நகராட்சிய கலைக்கனுமாம் நகராட்சிய! பேசாம உங்க கட்சிய கலைச்சிட்டுப் போங்கன்னு சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் எங்களுக்கு? ஆனால், இது நீங்கள் துவக்கிய கட்சி அல்ல! நம் சமுதாயத்தையும், அதன் அடையாளத்தையும் பாதுகாக்க காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற இறைநேசரால் துவக்கப்பட்ட கட்சி என்பதால், அதுபோன்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. வெளியிலிருக்கும் நானே இந்தளவுக்கு தாய்ச்சபையை மதிக்கும்போது, உள்ளே இருந்துகொண்டு இப்படி பண்றீங்களே? நியாயம்தானா??
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross