செய்தி: DCW ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை! தடையை மீறி போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் கைது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என்றுதான் நமதூருக்கு விடிவு காலம் பிறக்குமோ? posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (Royal Kayal - 628204l)[24 August 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41747
படைத்தோனுக்கு பிரியம்தரும் ஒரு பெருந்தன்மையான புண்ணிய போராட்டாம்! இதில்பங்கு கொண்டSDPI அமைப்பின் அனைத்து அன்புள்ளங்களுக்கும் அனைத்து காயலர்களின் சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்!
பலவருடங்கள் பாலைவன பூமியில் இருந்து விட்டு விடுமுறையில் வந்த நான் வீட்டு திருமணம் போன்ற பல முக்கிய வேலைப்பளுவில் மும்முரமாக இருந்ததால் நம்மூர், நாட்டு நடப்புகளிலிருந்து சற்று நகர்ந்து இருந்ததை நினைத்து மிகவும் வருந்துகிறேன்! இன்றுதான் சற்று ஓய்வு கிடைத்த நேரத்தில் கனணியை திறந்தநான் இந்த முக்கிய செய்தியை பார்க்க முடிந்தது!
பெருந்தன்மையான புண்ணிய போராட்டம் என்று நான் எழுதியதற்கு காரணம் இந்த கொடிய ஆலையின் கொடூர தாக்கத்தினால் கொத்துக் கொத்தாக மடிந்துகொண்டிருக்கும் காயலர்களின் விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியா இளகிய இதயங்கள் ஊரால்
வேறுபட்டிருந்தாலும் உள்ளத்தால் ஒன்றுபட்டு முற்றுகைபோரட்டத்தில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள்துணை அனுதினமும் கிடைத்து குவிய வல்லோனை இதயமுருக வேண்டுகிறேன்!
சென்னைவாழ் காயல் சகோதரர்களின் ஒருசில இளகிய இதயத்தார்கள் தவிர பெரும்பாலோர்கள் கலந்து கொள்ளாததை நினைத்து உண்மையில் வேதனையும், வெட்கமும் அடைகிறேன்! யாருக்கோ வந்தவிதி போலவும் போக்கத்த அமைப்பு போர்க்குரல் தூக்குறது என்ற எண்ணத்திலும் இதயமற்றவர்களாக ஏனோதானோவென்று இருந்தவர்களை எண்ணி உண்மையிலேயே உள்ள வேதனை அடைகிறேன்!
ஒரு உல்லாச பொழுது போக்கு பயணத்திற்கு எத்தனை பிரயாசை எடுத்து தீவிரமாக செயல்படுபவர்களே,இந்த நம் ஊர் உயிர் காக்கும் உத்தம போராட்டம் உங்கள் கவனத்திற்கு வரவில்லையா? எந்த ஈடுபாட்டிலும் இறைவனுக்கு பயந்து நேர்மையுடைய நடுநிலையை கையாளுங்கள்!
ஊரில் இந்த ஆலை எதிர்ப்பு அமைப்பிலுள்ளவர்கள் இந்த முற்றுகை போரட்டத்திதைப் பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தை போதிய அளவு செய்யவில்லையோ என்ற ஐயப்பாடும் என்மனதில் எழுந்திருக்கிறது! உங்களில் போதிய வாய்ப்புள்ளவர்கள் பெரும்பாலோர் சென்னையில் பங்குபெற்றிருக்கவேண்டும்!
உண்மையான ஒற்றுமையையும், ஊர்மக்களின் வாழ்வுரியையும், அவர்களின் உயிர் பாதுகாப்பையும் உணர்வால் ஒவ்வொரு காயல் சகோதரர்களும் என்று உள்ளப்பூர்வமாக உணர்கிறார்களோ அன்றுதான் நமதூருக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross