நல்ல மனம் வாழ்க! posted byகவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர் (துபாய்)[01 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4178
அனிதா மற்றும் ஸ்டாலின் அவர்களை, முன்னாள் என்ற
அடைமொழியுடன் குறிப்பிட்டதில் ஐக்கிய சங்கத்தின்
புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.
சுனாமிக்குடியிருப்பு விஷயத்தில், மக்கள் மத்தியில் இழந்து
விட்ட நம்பிக்கையை ஐக்கியப்பேரவை மீட்டெடுக்கவேண்டும்.
அவர்கள் எடுத்துவந்த, வரும் நடவடிக்கைகளை நகரமக்கள்
மத்தியில் வெள்ளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
நமதூர் மக்கள், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு,
வெளியூர்வாசிகளுக்கு, நிலத்தை விற்கவேண்டாம் என்ற
வேண்டுகோள், இ.பி.அலுவலகம் மற்றும் DCW குறித்த
தீர்மானங்கள் பாராட்டுக்குரியவை.
நீண்டகாலமாக சமூக நலப்பணியில் தம்மை அர்ப்பணித்துக்
கொண்டிருக்கும் AK.பீர் முஹம்மத் காக்கா அவர்கள்
இறையருளால் நீடூழி வாழ வாழ்த்தும் அதே நேரத்தில்,
ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போவதால், ஒரு
அமைப்பின் தீர்மானமே வாசிக்க இயலாமல் போய்விட்டது
என்னும் கருத்து ஏற்புடையது அல்ல என்பதனை பதிவு
செய்வதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross