செய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை! இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நன்றியும் வேண்டுகோளும் வாழ்த்துக்களும்! posted byஜெம் தீபி (Kayalpatnam)[12 September 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41844
நகர் மன்ற தலைவருக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி.
இதே ஒற்றுமையோடு எஞ்சியுள்ள காலங்களில் விடுபட்டுள்ள திட்டங்களை விரைந்து நிறைவேற்ற என் அன்பான வேண்டுகோள்! அவைகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சகோதரர் ‘காக்கும் கரங்கள்’ M.A.K.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொன்னது போல, அதிகமான போக்குவரத்துள்ள இந்தச் சாலை முழுவதும் ஆழமாகத் தோண்டி அதன்பிறகு தரமான தார்சாலை அமைக்க வேண்டும்.
அந்தச் சாலை அமைக்கும்போது கீழ்க் கண்ட விஷயங்களை முக்கியமாக கவனித்து செயல் பட வேண்டும்.
1) மழைக் காலங்களில் இந்தச் சாலையில் ஏற்படும் நீர்ப் பெருக்கம் சரியான முறையில் வடிந்து செல்லத் தோதுவாக, அல்ஜாமிஉல் அஸ்கர் முனையிலிருந்து கடற்கரை வரை, சாலையின் இரு பக்கவாட்டிலும் ஓடை (gutter line) அமைக்க வேண்டும். அதன் இறுதிப்பகுதியை கடற்கரையில் ஒரு பெரிய செயற்கை குளமோ (pool) / பெரிய தொட்டியோ (reservoir) அமைத்து மழை நீரை சேமிக்க வேண்டும்.
கடற்கரை நிலப் பகுதிகளில் நிறைய மரங்களை நட்டி அதற்கு நீர் பாய்ச்ச அந்தத் தண்ணீர் உபயோகமாக இருக்கும், அல்லது செயற்கை நீரூற்றுக்களை வடிவமைத்துக் கட்டினால், சுற்றுலா வருவோருக்கு இன்பகரமாக இருக்கும். நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் இது ஓர் பசுமைப் புரட்சி என்பதை நினைவிற்கொண்டு செயல்பட்டால் நல்லது.
2) சாலையின் நடுப் பகுதி லேசான மேடாகவும், தண்ணீர் தேங்காமல் வழிந்து ஓடும்படி கரைப்பகுதி தாழ்வாகவும் அமைக்க வேண்டும்.
3) K.T.M.தெரு, K.M.K.தெரு, அலியார் தெரு, ஆசாத் தெரு, பரிமார் தெரு, சித்தன் தெரு, அப்பா பள்ளித் தெரு, தீவுத் தெரு மேல் பகுதி, மரைக்கார் பள்ளித் தெரு, தீவுத் தெரு கீழ் பகுதி, சொளுக்கார் தெரு, முத்துவாப்பா தைக்காத் தெரு, கொச்சியார் தெரு, தேங்காய் பண்டக சாலை ஆகிய தெருக்களின் முனையில் சந்திப்பு தொட்டி (junction pit) கட்டி அதை ஓடையோடு இணைத்து விடவேண்டும்,
அந்தத் தெருக்களிருந்து பெருக்கெடுத்துவரும் மழை நீர் எளிதில் வடிந்து, சந்திப்புத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, ஓடையின்வழியே எவ்வித இடையூறுமின்றி கடற்கரைக்குச் சென்று விடும்படி வடிவமைக்க வேண்டும்.
4) அந்தச் சாலையின் இரு பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புக்களை கண்டிப்பாக அகற்ற வேண்டும்.
5) சந்திப்புச் சாலைகள் இணையும் இடங்களில் வேகத் தடை அமைத்து அதற்கு முறையான கருப்பு, வெள்ளை (zebra crossing) வண்ணம் தீட்ட வேண்டும்.
6) அந்தச் சாலை முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
7) அந்தச் சாலையின் இரு பகுதியிலும் இருக்கும் காலி இடங்களில் நிழல் தரும் மரங்களை நட வேண்டும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்புக்களை தனியார் பெறு வணிக நிறுவனங்களிடமோ/ தன்னார்வத் தொண்டு அமைப்புக்களிடமோ வழங்கினால் சிறப்பாக இருக்கும். அதைச் சுற்றி வேலியமைத்து, அதில் அவர்களின் விளம்பரங்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.
8) அந்தச் சாலை அமைந்த பிறகு, அதில் எவ்விதத்திலும் ஆக்கிரமிக்கவோ, பந்தல் போட / ஆர்ச் போட என்று குழி தோண்டவோ, வேறு எந்த ரூபத்திலும் அந்தச் சாலையை யாரும் சிதைக்கவோ அனுமதிக்கவே கூடாது. இவ்விஷயத்தில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
9) அந்தச் சாலைக்கு, நமது பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி, சமீபத்தில் நம்மை விட்டும் மறைந்த மேதகு டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் நாமத்தைச் சூட்ட, நகர் மன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும். உடனடியாக அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் என் தாழ்மையான கருத்தாகும்.
இது சம்பந்தமாக வேறு கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால் இக்கருத்தைத் தொடர்ந்து வரையுங்கள். நல்ல விஷயங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது நம் எல்லோருடைய கடமையும் கூட.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross