Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[13 September 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41849
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஆவணங்கள் தயார் செய்த நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது போல் நமது நகராட்சி ஆணையர் மூலம் முறைகேடாக DCW தொழிற்சாலையின் கட்டிட விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி அளித்த அந்த கட்டிட விரிவாக்க அனுமதியை ரத்து செய்யப்பட வேண்டும்.
கடந்த சில மாதங்கள் முன்பு நகர்மன்ற மாதாந்திர கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் DCW தொழிற்சாலையின் கட்டிட விரிவாக்க அனுமதியை ரத்து செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தபோது இரு உறுப்பினர்கள் தவிர்த்து மீதமுள்ள நமது மாண்புமிகு உறுப்பினர்கள் அத்தீர்மானத்தை உடனடியாக ஆதரிக்காமல் DCW தொழிற்சாலை குறித்து ஆய்வு செய்த பிறகு தங்களது நிலைபாட்டை சொல்கிறோம் என அத்தீர்மானத்தை நிறைவேற்றாமல் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்து செய்யும் அத்தீர்மானத்தை நிறைவேற்றாமல் நமது மாண்புமிகு உறுப்பினர்கள் களைந்து சென்று மாதங்கள் பல ஆகி விட்டது அனேகமாக நமது மாண்புமிகு உறுப்பினர்கள் DCW தொழிற்சாலைக்கு சென்று அது குறித்து அங்கு இயங்கும் பல பிரிவுகளை / உற்பத்திகளை ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் தயார் செய்து அவர்கள் வசம் வைத்து இருக்கலாம் - அந்த அறிக்கையை கட்டிட விரிவாக்க அனுமதியை ரத்து செய்யும் தீர்மானம் கொண்டு வந்த நகர்மன்ற தலைவரிடம் சமர்ப்பித்து விரைவில் ரத்து செய்யும் அத்தீர்மானத்தை நகர்மன்ற அவசர கூட்டத்தை கூட்டி அத்தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் - நகரில் புற்றுநோயால் இறந்த மற்றும் புற்றுநோயால் வலியும் / பொருளாதாரத்தை இழந்தும் தினமும் துடிதுடிக்கும் மக்களின் குடும்பத்தின் நல் பிராத்தனைகளை பெறுங்கள்.
மாண்புமிக உறுபினர்களே...! கட்டிட விரிவாக்க அனுமதியை ரத்து செய்யும் தீர்மானம் யார் கொண்டு வருகிறார் என்பதை யோசிக்காதீர்கள்..! ஏன்...? எதற்காக..? கொண்டு வருகிறார் என்பதை மட்டும் யோசியுங்கள் - அல்லது - மாண்புமிக உறுபினர்களே...! நீங்கள் வேறு ஏதாவது தமக்கு தடை படும் என யோசிக்கிறீர்களா..?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross