தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கில் உள்ள DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஆவணங்கள் (ENVIRONMENTAL IMPACT ASSESSMENT; EIA)
தயார் செய்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் PURE ENVIRO ENGINEERS PRIVATE LIMITED ஆகும். சென்னையை தலைமையிடமாக கொண்டு
செயல் புரியும் இந்நிறுவனத்திற்கும், DCW நிறுவனத்திற்கும் நீண்ட நாட்கள் தொடர்புள்ளது.
DCW நிறுவனம் - 2006ம் ஆண்டு மேற்கொண்ட விரிவாக்கப் பணிகளுக்கும் PURE ENVIRO ENGINEERS PRIVATE LIMITED நிறுவனம் தான் - அனுமதி
பெற ஆவணங்கள் தயார் செய்தது. மேலும் - DCW தொழிற்சாலையின் கழிவுகளை பராமரிக்க ஒப்பந்தப் பணியாளர்களையும் இந்நிறுவனம் DCW
தொழிற்சாலைக்கு வழங்கி உள்ளது.
அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி (ENVIRONMENTAL CLEARANCE) பெற விரும்பும் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டிய EIA ஆவணங்களை தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், முதலில் புது டில்லியில் உள்ள NATIONAL ACCREDITATION BOARD OF EDUCATION AND TRAINING (QUALITY CONTROL OF INDIA) நிறுவனத்திடம் அங்கீகாரம் (ACCREDITATION) பெற வேண்டும்.
அவ்வகையில் - PURE ENVIRO ENGINEERS PRIVATE LIMTED நிறுவனம், 2011ம் ஆண்டு 17 துறைகளில் EIA ஆவணங்களை தயாரிக்க விண்ணப்பம் செய்தது. இருப்பினும், அந்நிறுவனத்திற்கு போதிய அனுபவம் இல்லாத காரணத்தால், 4 துறைகளுக்கு மட்டும் ஆவணங்கள் தயாரிக்க அனுமதி
வழங்கப்பட்டது. மேலும் - அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்படி, மாநில அளவில் அமைக்கபப்ட்டுள்ள STATE ENVIRONMENTAL IMPACT
ASSESSMENT AUTHORITY (SEIAA) துறைகள் அனுமதி வழங்க அதிகாரம் பெற்றுள்ள திட்டங்களுக்கு (CATEGORY B) மட்டுமே ஆவணங்களை தயார்
செய்ய முடியும்.
இருப்பினும் - PURE ENVIRO ENGINEERS PRIVATE LIMTED நிறுவனம், DCW நிறுவனத்தின் சமீப விரிவாக்க திட்டத்திற்கும் EIA ஆவணங்களை தயார்
செய்தது. DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் SYNTHETIC ORGANIC CHEMICALS [Category 5(f); Sector 21] வகையை சார்ந்ததாகும். இந்த வகை திட்டத்திற்கு ஆவணங்கள் தயாரிக்க PURE ENVIRO ENGINEERS PRIVATE LIMTED நிறுவனத்திற்கு அனுமதி கிடையாது.
மேலும் - மத்திய அரசு அளவில், புது டில்லியில் அனுமதி பெறப்படவேண்டிய திட்டம் (CATEGORY A) இது. புது டில்லியில் அனுமதி பெறும் வகையான எந்த
திட்டத்திற்கும் ஆவணங்கள் தயாரிக்கவும் இந்நிறுவனத்திற்கு அனுமதி கிடையாது.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக தொடரப்பட்டு தற்போது நடைபெற்று வரும் வழக்கில் - முன் வைக்கப்பட்டுள்ள
குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று. அவ்வழக்கில் உள்ள ஆறு எதிர் மனுதாரர்களில், PURE ENVIRO ENGINEERS PRIVATE LIMTED நிறுவனமும்
உள்ளது.
DCW நிறுவனத்தின் வழக்கில் உள்ள விரிவாக்கத் திட்டத்திற்கு ஆவணங்கள் தயாரித்த மற்றொரு நிறுவனம் CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED - ஆகும். இது பழமை வாய்ந்த PARRY'S நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் நிறுவனம்.
இந்த நிறுவனம் - DCW தொழிற்சாலைக்கு, ஜூலை - செப்டம்பர் 2012 காலகட்டத்தில், விரிவாக்கத் திட்டம் சம்பந்தமாக சில ஆவணங்களை தயார்
செய்ததது. இருப்பினும், இந்நிறுவனம் ஏப்ரல் 2012 முதல் ஜூலை 2013 வரை, இவ்விரிவாகத் திட்ட சம்பந்தமான துறைக்கான அங்கீகாரத்தை
பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தொடர்ந்துள்ள வழக்கில் CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED நிறுவனமும் ஒரு எதிர் மனுதாரர் ஆகும்.
அங்கீகாரம் இல்லாத துறைகளுக்கு ஆவணங்கள் தயாரிக்க உதவிய இந்த இரு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க, புது டில்லியில் உள்ள
NATIONAL ACCREDITATION BOARD OF EDUCATION AND TRAINING (QUALITY CONTROL OF INDIA) அமைப்பிடம் புகார் மனு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இப்புகார் மனு குறித்து இவ்வாண்டு மே மாதம் பதில் வழங்கிய NATIONAL ACCREDITATION BOARD OF EDUCATION AND TRAINING (QUALITY CONTROL OF INDIA) அமைப்பு, PURE ENVIRO ENGINEERS PRIVATE LIMTED மற்றும் CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED ஆகிய நிறுவனங்கள் - அங்கீகாரம் பெறாத துறைகள் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு ஆவணங்கள் தயார் செய்ததது தவறு என்றும், இது குறித்து அந்த இரு நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும், மீண்டும் அத்தவற்றினை செய்தால் அந்நிறுவனங்களின் அங்கீகாரம் முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
ஜூலை மாதம், தான் தொடர்ந்துள்ள வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பதிலுக்கான பதிலில் (REJOINDER) இந்த தகவல்கள் இணைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே, NATIONAL ACCREDITATION BOARD OF EDUCATION AND TRAINING (QUALITY CONTROL OF INDIA) அமைப்பு - தனது ஆகஸ்ட் 5 கூட்டத்தில், PURE ENVIRO ENGINEERS PRIVATE LIMTED நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு காரணமாக, பலமுறை கேட்டும் தேவையான தகவல்களை அந்நிறுவனம் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:00 / 14.09.2015] |