காயல்பட்டினம் DCW தொழிற்சாலையிடம் இருந்து, காயல்பட்டினம் நகராட்சி வசூல் செய்யவேண்டிய 2013-14 ஆண்டிற்கான உட்கட்டமைப்பு (INFRASTRUCTURE) வரி விஷயத்தில் முறைக்கேடு நடந்துள்ளதாக மாதமிருமுறை வெளிவரும் சட்டபஞ்சாயத் இதழ் - தனது செப்டம்பர் 1-15 பதிப்பில் - செய்தி வெளியிட்டுள்ளது.
சட்ட பஞ்சாயத்து (செப்டம்பர் 1 - 15, 2015)
இச்செய்தி குறித்து, காயல்பட்டணம்.காம் இணையதளம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜனிடம் வினவியது. 2013-14 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையில் உட்கட்டமைப்பு வரி குறித்து பதிவுகள் இருப்பதை ஊர்ஜிதம் செய்த ஆணையர், தன்னை பற்றி அப்பத்திரிக்கையில் வந்துள்ள தகவல்கள் உண்மையல்ல என மறுப்பு தெரிவித்தார். |