காயல்பட்டினம் மவ்லானா அப்பா சின்ன கல் தைக்காவில் இயங்கி வரும் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியின் சார்பில், திருமணமாகி வீட்டிலிருக்கும் மகளிருக்கு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, சதுக்கைத் தெருவிலுள்ள ரவ்ழத்துல் ஜன்னஹ் பெண்கள் தைக்காவில், 13.09.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 17.30 மணியளவில், “இல்லத்தரசியருக்கான பாடப் பிரிவு” அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ கலந்துகொண்டு, புதிய பாடப்பிரிவு குறித்து அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
கள உதவி:
ஹாஃபிழ் N.A.M.ஈஸா ஜக்கரிய்யா
முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |