சந்திரன் அடிப்படையிலான இஸ்லாமிய நாள்காட்டி கொண்ட சர்ச்சை உலகின் பல பகுதிகளில் நிலவுவது போல் காயல்பட்டினத்தில் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனால் - ஒரே ஆண்டில், நகரில் பல்வேறு தினங்களில், நோன்பு பெருநாளும், ஹஜ் பெருநாளும் சில காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகள் கழித்து, இவ்வாண்டு நகரின் பெருவாரியானோர் ஒரே தினத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாட உள்ளனர்.
இவ்வாண்டு செப்டம்பர் 23 அரஃபா தினம் என்றும், செப்டம்பர் 24 ஹஜ் பெருநாள் என்றும் சவுதி அரேபியா அரசாங்கம், தமிழ்நாடு மாநில காஜி மற்றும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் செப்டம்பர் 24 அரஃபா தினம் என்றும், செப்டம்பர் 25 ஹஜ் பெருநாள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணக்கு அடிப்படையில் செயல்புரியும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினருக்கு, செப்டம்பர் 22 அரஃபா தினம், செப்டம்பர் 23 ஹஜ் பெருநாள் ஆகும்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக காயல்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் தினங்கள்
2006/2007 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 30/12/2006
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 1/1/2007
2007 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 19/12/2007
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 21/12/2007
2008 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 8/12/2008
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 10/12/2008
2009 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 27/11/2009
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 28/11/2009
2010 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 16/11/2010
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 17/11/2010
2011 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 06/11/2011
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 07/11/2011
2012 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 26/10/2012
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 27/10/2012
2013 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 15/10/2013
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 16/10/2013
2014 ஆம் ஆண்டு
அல்ஜாமியுல் அஜ்ஹர் - 04/10/2014
மஹ்லரா, ஜாவியா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - 06/10/2014 |